Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ ஆன்மிகம் ’

அனுபவம், வழிகாட்டிகள்

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

September 7, 2011
-
வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார் [மேலும்..»]

அரசியல், பிறமதங்கள், பொது

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ? [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

ஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்

பிற சமயத்தார் சைவத்திற்குத் தீங்கு இழைக்கத் தொடங்கும் அவ்வப்போது, தம் வாக்கு வல்லபத்தால், அவர்களை வென்று சைவப் பயிர் வளர்த்த வைதிகசைவக் காவலர் அப்பைய தீட்சிதர்... ஊர்ணநாபி (சிலந்திப்பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியிலெப்படிப் பல ஓஷதிகள் (தாவரங்கள்) உண்டாகின்றனவோ, மனிதன் மேனிமீது எப்படித் தலைமயிர் உடம்புமயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய அட்சரத்திலிருந்து (அழிவிலாதது) யாவும் உண்டாகின்றன... சிவன் எளிய பூசைக்கே உளம் மகிழ்வான். அவனை மகிழ்விக்கப் பச்சிலையும் நீரும் போதும்.. ' [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

அமைதியின் ஓசை

February 2, 2011
-
அமைதியின் ஓசை

வாயிலில் நிழல்பரப்பி நிற்கும் வயதான வேப்ப மரம்- பல ஆண்டுகளாக அந்த ஆஸ்ரமத்திற்கு வந்தவர்களை வரவேற்றது போலவே- நம்மையும் பார்த்து மெல்ல தன் இலைகளை அசைக்கிறது... அண்ணாமலையில் வாழும் சித்தர்கள் என ரமணரால் அடையாளம் கண்டுகொள்ளபட்டதால் இந்த கெளரவம் பெற்றிருப்பதை அறிகிறோம்... திட்டமிட்ட அட்டவணைப்படி நிகழ்சிகள் நடைபெறும் இந்த ஆஸ்ரமத்தின் விதிகள் எவருக்காகவும் தளர்த்தப்படுவதில்லை... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்

கிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்

ஜெயதேவர் அபசாரம் என்று கருதி எழுதாமல் விட்ட வரிகளை அவர் வடிவில் வந்த கண்ணனே எழுதி, இராதையின் பாதம் தன் சிரசின் மேற்படுவதாகப் பாடி, அது அபசாரமன்று, அதுவே தனக்கு உவப்பானது எனக் குறிப்பால் உணர்த்தினான் என்பது வரலாறு உமைஅம்மையின் திருவடியில் ஐயன் விழுந்து வணங்கினான் என்று வெளிப்படையாகக் கூறாமல், அவன் சென்னியிலே இருந்தனவெல்லாம் அவள் திருவடியிலே மணந்தன என்று கூறுயது ஒரு நயம். தமிழ்ச்சைவப் புலவர்கள் இத்தகைய அகப்பொருள் பாடல்கள் சிவபரத்துவத்தை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை என்றறிந்து கவியின்பத்தில் திளைக்கின்றனர் [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், இலக்கியம், தத்துவம்

பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம்... தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது... நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்... [மேலும்..»]

ஆன்மிகம், கவிதை, வைணவம்

கோபிகா கீதம்

August 4, 2010
-
கோபிகா கீதம்

இன்பம் ஊற்றெடுக்கும் - சோகம் அழிக்கும் - ஸ்வரமெழுப்பும் புல்லாங்குழல் அதை அழுத்தி முத்தமிடும்.... தூய அன்பிற்கு வெளி சாட்சியங்கள், பிரமாணங்கள் தேவையில்லை. அதற்கு அதுவே சாட்சி, அதுவே பிரமாணம்” என்று பக்தி சூத்திரம் இதனை இன்னும் அழகாகச் சொல்கிறது. கோபிகைகளின் பக்தியில் இந்த தத்துவத்திற்கு அற்புதமான உதாரணம் உள்ளது... இந்திய மனதில் “பக்தி” என்ற சொல் “மதரீதியான” குறுகிய பொருள் கொண்டதல்ல; பரந்த ஆழமான பொருள் கொண்டது. அதனால் தான் தேசபக்தி, பதிபக்தி, குருபக்தி ஆகிய சொற்கள் நம் மொழிகளில் புழக்கத்தில் உள்ளன.. [மேலும்..»]

ஆன்மிகம், புத்தக விமர்சனம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகள் ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். "நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்" என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; ... ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள்... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6

ஒவ்வொரு நாளும் சாயரட்சையில் எல்லாச் சிவன் கோயில்களின் கலைகளும் திருவாரூர் கோயில் தியாகராஜர் சந்நிதியில் ஒடுங்கும் என்றும், ஒவ்வொரு நாளும் இந்திரன் அங்கு சாயங்காலப் பூஜை செய்வதாகவும் ஐதிகம். திருவாரூர் என்பதே திரு+ஆர்+ஊர் என்பதைக் குறிக்கும்; லக்ஷ்மி பூஜை செய்த இடம் அது. ஒருமுறை அக்கோயிலின் முகப்பில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில்.... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

...இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.... [மேலும்..»]