Posts Tagged ‘ ஆரியப் படையெடுப்புப் புரளி ’

புத்தக விமர்சனம், வரலாறு

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

October 26, 2010
-
தமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்

ஒரு அட்டவணை திராவிடர்கள் மற்றும் ஆரியர்களின் பண்புகளை கட்டம் கட்டி அழகாக ஒன்பது பாயிண்டுகளில் பட்டியலிடுகிறது. காலனிய காலகட்டத்தின் பிழையான இனவாத கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் அதையே இங்கு சொல்கிறார்கள் - நவீன மானுடவியலும், மரபணு அறிவியலும் ஒட்டுமொத்தமாக அதைப் பொய்யானது என்று நிரூபித்துவிட்ட போதும்.. ”லெமூர் மூதாதைகளிலிருந்து தமிழ் பேசிக்கொண்டே உருவான ஆதி மானுடம்” எப்படி அபத்தத்திலும் மகா அபத்தமான கருதுகோள் என்பது புரிய வரும்...(மூலம்: மிஷேல் டேனினோ)

மேலும் »

இலக்கியம், நிகழ்வுகள், வரலாறு

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

செம்மொழி விருதுகள்: சில கேள்விகள்

தனது வாழ்க்கையையே சிந்து சமவெளி இலச்சினைகளை விளக்கிட செலவழித்த மகாதேவன், ஹரப்பா பண்பாடு வேதப் பண்பாடு என்று சொல்வதை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் ஒரு இனவாதச் சட்டகத்தில் அந்த பண்பாட்டின் வரலாற்றை விளக்கி அதனை இன்றைய அரசியலுடன் முடிச்சு போடக்கூடியவர்களிடம் எவ்விதம் ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் விழா மதிப்பு பெறுகிறார்?... பழந்தமிழரின் ஆன்மிகப் பண்பாட்டின் இந்த மைய அச்சுக்கள், பழந்தமிழரை பாரதப் பண்பாட்டுச் செழுமையுடன் இணைக்கும் இப்பாவுகள் - காட்டப்பட்டனவா இம்மாநாட்டில்? வலியுறுத்தப்பட்டனவா? (மூலம்: டாக்டர் எஸ்.கல்யாணராமன்)

மேலும் »

வரலாறு, வேதம்

சோமபானம் என்னும் மர்மம்

சோமபானம் என்னும் மர்மம்

இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது.... ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.

மேலும் »

கேள்வி-பதில், நிகழ்வுகள், வரலாறு

மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

ஹார்வார்ட் ஸம்ஸ்க்ருத பேராசிரியர் மைக்கேல் விட்சல் சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விகளை தொடுத்திருந்தது நினைவிருக்கும். அவரது வருகையை ஒட்டி நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது ......

மேலும் »

கேள்வி-பதில், நிகழ்வுகள், வரலாறு

சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

சம்ஸ்கிருத அறிஞர் மைக்கேல் விட்செலுக்கு சில கேள்விகள்

மைக்கேல் விட்செல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியர் இன்று மாலை சென்னையில் பேசுகிறார். எமது வ்ரலாற்று ஆர்வலர் குழு தொகுத்திருக்கும் இந்தக் கேள்விகளை இந்தத் தருணத்தில் அவரிடம் எழுப்ப விரும்புகிறோம், பேராசிரியர் கண்டிப்பாக அவற்றுக்கு விடையளிப்பார் என்ற நம்பிக்கையுடன்.

மேலும் »

வீடியோ

Video: ARYAN invasion theory, proven false – INDIA (part 2 of 3)

ஆரியப் படையெடுப்பு என்ற புரளியைப் பயன்படுத்தி எவ்வாறு பாரத மக்களுக்குள் பெரும் பிளவு உண்டாக்கப்பட்டது? மதம் பரப்ப வந்தவர்கள் எவ்வாறு இந்தியாவை மனம் துவளச் செய்வதற்காகச் சரித்திரப் புரட்டுச் செய்தனர்? உண்மை என்ன? இவற்றைப் பற்றியெல்லாம் சான்றுகளோடு அறிய ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ. இவ்வரிசையில் இரண்டாவது பகுதி இது.

மேலும் »