நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்

தான் உண்மையில் என்ன செய்கிறோம், தனது உண்மையான இலக்கு, கோட்பாடு பற்றியெல்லாம் பொதுவெளியில் ஆர்.எஸ்.எஸ். பேசுவதே இல்லை. சேவையை ஊருக்குச் சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன என்று ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையிலும் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஓர் அம்பேத்கரியரின் பார்வை என்ற கோணத்திலும் இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்..

View More நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகன் – புத்தக அறிமுகம்

சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

தேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்… 1969 மாநாட்டில் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும் பலதரப்பட்ட மக்களிடமும் மிக சகஜமாகப் பழகி வந்தார்….

View More சேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்

அஞ்சலி: அஷோக் சிங்கல்

ராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல். 1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, களத்தில் இறங்கி தொண்டர்களுடன் நின்று போராடியவர். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம் வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது… “மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது. பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு எந்த இடமும் அளிக்கப் படக்கூடாது. நமது ஆதி மனுஸ்மிருதி என்றால் அது ஸ்ரீமத்பகவத்கீதை தான்… ” என்று கருத்துக் கூறினார் அவர். அதன் படியே, தலித்கள் உட்பட அனைத்து சாதி இந்துக்களுக்களும் அர்ச்சகராகும் உரிமைகளையும், வேதக் கல்விக்கான வாய்ப்புக்களையும் வி.ஹி.ப வலியுறுத்தி வந்திருக்கிறது…

View More அஞ்சலி: அஷோக் சிங்கல்

விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

View More விதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்

திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்

மேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. தெய்வாதீனமாக மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார் ஆனந்த்… விநாயக சதுர்த்தி சமயத்திலேயே எஸ்.எம்.எஸ். வடிவில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது…. கடந்த பத்தாண்டுகளாகவே இப்பகுதி இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கூடாரமாக இயங்கி வருகிறது. காவல்துறையினர் முஸ்லிம் அமைப்புகள் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர்… ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை தான் முஸ்லிம்களிடையே வெறுப்பூட்டும் பிரசாரத்தை அதிக அளவில் நடத்துகின்றன…

View More திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்

நலம் பெறப் பிரார்த்திப்போம்!

பா.ஜ.க. தேசிய செயலரும், ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக தமிழகத்தில் நெடுங்காலம் பணியாற்றியவருமான திரு.வி.சண்முகநாதன் அவர்கள் உடல்நலம் குன்றி புதுதில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது… அன்னார் விரைவில் பரிபூரண ஆரோக்கியத்துடன் உடல்நலம் பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம். ஆலயங்களில் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதங்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைப்போம். அன்னாரது முகவரி….

View More நலம் பெறப் பிரார்த்திப்போம்!

அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி

வாழ்வே தவமாக தேச நலனுக்கும், இந்து ஒற்றுமைக்கும் பாடுபட்ட திரு கு.சி.சுதர்ஷன் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி… தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார்….

View More அஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி