Posts Tagged ‘ இசை ’

புத்தக விமர்சனம், வரலாறு

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்

இஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே.

மேலும் »

இசை, கலைகள், மகளிர்

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

குருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி

ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே!

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள்... மரபு என்றால் என்ன? தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்?... சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”, பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள்.

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை...

மேலும் »

இசை, கலைகள்

இசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறு

இசைக்கூறுகள் – 6 : குறியீட்டு முறையின் வரலாறு

1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் - "இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்" - என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மேலும் »

இசை, கலைகள்

இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

இசைக்கூறுகள் – 5 : இசைப் பயிற்சி மற்றும் அரங்கிசை வடிவங்கள்

ஐரோப்பா இசை பயிற்சியில், சில சுரக்கோர்வைகளை கற்றுக்கொண்டு சின்ன பாடல்களையோ, துணை இசைக் கோர்வைகளையோ இசைக்கலாம். கர்நாடக சங்கீத பயிற்சிப் பாடங்களோ படிப்படியாக சுரங்களைப் பாடுவதையும், அவற்றைக் கோர்த்து ஒரு ராகத்தைப் பாடுவதையும் உருவாக்கும். இந்தப் பயிற்சியிலும் பல நிலைகள் உள்ளன...

மேலும் »

ஆன்மிகம், இசை, வைணவம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

சிவந்து மலர்ந்த தாமரைப் பூவை வண்டுகள் சூழ்ந்து கொண்டது போல முகத் தாமரையை சுருண்ட தலைமயிர் அழகு செய் கிறது. இந்த முகத் தாமரை யிலிருந்து தேனினும் இனிய கீதம் பெருகி வருகிறது. இந்த அமுத கீதத்தைப் பருகிய மான்கள் எப்படி அனுபவிக்கின்றன? ...ண்ணனின் கானா மிர்தம் கிளம்பியதுமே அங்குள்ள மரங்கள் எல்லாம் மகரந்தத் தாரைகளைப் பெருக்கு கின்றன. சில மரங்கள் இந்த வேணு கானத்தைக் கேட்பதற்காகக் கிளை களைத் தாழ்த்திக் கொண்டு நிழலைத் தரு கின்றன ...

மேலும் »

இசை, இலக்கியம், கலைகள், சைவம்

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்.... யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் ...

மேலும் »

இசை, கலைகள், பொது

இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்

இசைக்கூறுகள் – 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்

ராணுவ அணிவகுப்புகளில் இருக்கும் ஒற்றுமை தாள அடிப்படையிலேயே அமைந்திருக்கும்... இதில் நாம் இருவகை இயக்கங்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். அப்படி செய்யும்போதே ஒரு ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிகழ்கின்றது. இதைப் போன்று தொடந்து செய்து வந்தால் இரு பகுதிகளாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரே போன்ற இசை அமைப்பு மட்டுமே உருவாகியிருக்கும்.

மேலும் »