Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ இந்துக்கள் மீது வன்முறை ’

இந்து மத மேன்மை, சமூகம்

இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

இந்துக் கடவுளர்கள் கேலிக்குரியவர்களா?

இந்த ஆண்டு விநாயகரின் பிறப்பைப் பற்றியும் பிள்ளையார் வழிபாடு பற்றியும் திண்டுக்கல், கோவை போன்ற சில ஊர்களில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மக்கள் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா எல்லா ஊர்களிலும் சந்து பொந்துகளில் உள்ள சின்னஞ்சிறு பிள்ளையார் கோயில்களிலும்கூட மிக விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், பிறமதங்கள்

தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்

தண்ணீர் தேசக் கண்ணீரும் ஒரு ஹிந்துத்துவ எதிர்வினையும்

இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுவது “கொஞ்சம் ஓவர்”...அட, இந்த வக்கிர மனநிலை ஓர் இறையியலாகவே ஆபிரகாமிய மதங்களின் மூலம் அந்த மத மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது... பாகிஸ்தானிய இயற்கைப் பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமைப்படுத்தும் ஈமானியக் கடமையை இஸ்லாமியப் பெருமக்கள் துறக்கவில்லை. ஹிந்துக்கள் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன பல ஊடகச் செய்திகள்... [மேலும்..»]

சமூகம், பொது, மகளிர்

இரு பெண்களின் கதை

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.... படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும். [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும், இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த, கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர். காவல்துறையினர் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர்... [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், பயங்கரவாதம்

இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

இராமநாதபுரம் மாவட்ட  இந்து மீனவர்களின் அவலநிலை

கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம். காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத் தான் செயல்படுகின்றன.. கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார், இஸ்லாமிய மதத் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப் படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார். [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொது

என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு... இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன? [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், நேர்காணல், பயங்கரவாதம், பொது, வீடியோ

திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்

திண்டுக்கல்லில் அன்னிய மத ஆக்கிரமிப்பு: சொந்த ஊரில் தமிழ் ஹிந்துக்கள் அகதிகளான அவலம்

நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது ... தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி. [மேலும்..»]

சமூகம், மகளிர்

அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா,ரேவதி

இது வெறும் செய்தியல்ல. ஒரு அரசின் மதவெறிக்கு எதிராக போராடும் ஒரு இளம் பெண்ணின் உண்மைக் கதை... ங்காரம்மா இஸ்லாமியர் என ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் அவர் ஹிந்துவானது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து இஸ்லாமிய சீர்திருத்த நிலையத்தில் அடைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுவார். பலவித மன-சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார். [மேலும்..»]

சமூகம், நிகழ்வுகள், பொது, வீடியோ

வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

வேதாளம் சொன்ன கதை: குமரி மாவட்டத்தில் ஒரு பிள்ளையார் கோவில்

வேதாளம் எள்ளி நகைத்து "மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் ... [மேலும்..»]

அரசியல், சமூகம், பொது

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

September 12, 2009
-
கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” ... தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)... [மேலும்..»]