கோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை - நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு - அறப்போராட்டம்...
இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.
நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்... ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?
(மூலம்: நவோமி ப்ரெட்டிமேன்) நானும் எங்களது பணியில் முழுமுற்றாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்... மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக... நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம்.
புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்... ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.
தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.
பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில், “புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும்”... கிறிஸ்தவ மிஷநரிகளின் மொழியும், வழிமுறைகளிலும் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர. அவர்களது கொள்கைகளும், இலக்குகளும் காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று அப்படியே தான் உள்ளன.... பொதுத் தளத்தில் அருண் ஷோரியுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டு இந்தியாவின் பல திருச்சபைகளிலும் உள்ள தலைமைப் பாதிரியார்களுக்கும், ஆர்ச்பிஷப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் ஒருவர் கூட இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.
பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது. போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன ...“ஒளி” “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள், தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல, தேவனின் ஆணைக்கும், அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும் (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”) குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது..
மது கைடபர்கள் வந்து தொல்லை கொடுக்கும் போதும் அறிதுயில் உணர ஹிந்து கற்றுக் கொண்டிருக்கின்றான். அவன் மீது வெறுப்பும், பகையும், அலட்சியமும், அழிநோக்கமுமாக, மாற்றார் பண்பாட்டுக் கடலைச் சிலுப்புவதில் எழுந்த விஷ்த்தையும் ...
ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? ... இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.