வேதங்களில் விதவை மறுமணம்

உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள்…

View More வேதங்களில் விதவை மறுமணம்

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படி திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது, ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு திருமணம் செய்வது அனேகமாக இல்லை. எனவே, இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது… இந்து அல்லது பதிவுச் திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி அப்படி அல்ல; ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக, முழுவதுமாக குறைக்கப் படுகின்றன. ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொள்ளும் பொழுது தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள்… கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். அது சரியல்ல, ஆனால், ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்…

View More லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

குஹாவின் பொய்

1949 எனும் ஒரு ஆண்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் டெல்லியில் 79 கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவற்றில் நேரு, அம்பேத்கர் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அக்கூட்டங்களில் இந்து சட்ட மசோதா இந்த பண்பாட்டின் மீதும் இந்து பாரம்பரியத்தின் மீதும் செய்யப்பட்ட தாக்குதல் என கூறப்பட்டது என்கிறார் ராமசந்திர குஹா. உண்மை என்ன?… போலி மதச்சார்பின்மை தன்னை அரசியல் சட்ட முகப்பில் நுழைத்து கொண்ட தருணம் இந்தியா இந்திராவின் பாசிச இருளில் இருந்த காலகட்டம். எனவே, போலி மதச்சார்பின்மைக்கு எதிரான இந்துத்துவத்தின் எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு ஆதரவானது; ஜனநாயக எதிர்ப்புசக்திகளான பாசிச -மார்க்ஸிய-வகாபிய அணிகளுக்கு எதிரானது….

View More குஹாவின் பொய்

ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

”நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை சகிக்கமுடியாததாக உள்ளது. .” என்றார் போதிசத்வ பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் …”கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்.” என்றார் ஜனாப் ஜவஹர்லால் நேரு… நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது….

View More ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்