மது ஒழிப்பு மகாயுத்தம்

இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடைபெறும் அறப் போராட்டங்கள், சமூகப் பணிகள், இந்து செயல் வீரர்களுக்கான சட்ட உதவி ஆகியவற்றுக்கு நிதி உதவி கோரி அனுப்பப் பட்ட வேண்டுகோளும் நமக்கு வந்தது. அதனை அப்படியே கீழே தருகிறோம்… இந்து மக்கள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மகாயுத்தம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றூகையிடும் போராட்டம்…

View More மது ஒழிப்பு மகாயுத்தம்

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை… நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது… சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது… இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன…

View More இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

மீனவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மதம் மாற்றியதைத் தவிர வேறு எந்த சாதனையும் இதர அமைப்புகளால் நடக்கவில்லை. மதம் மாறாத இந்து மீனவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பும் இது நாள் வரை பெரிதாக கிட்டவில்லை. அவர்களது பிரச்சனைகளை பேச அமைப்புகள் பெரிதாக உருவாகவில்லை. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இவ்வாறு மாநாடுகள், போராட்டங்கள் என்று எடுத்து செய்வது பாராட்டுக்குரியது.

View More இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

கோவையில் விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது… முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.. குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் அவர்களின் பிரத்யேக பேட்டி, மற்றும் கண்கவர் விநாயகர் ஊர்வல புகைப்படங்கள்…

View More எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்

திப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டன.. 200 ஆண்டுகளாக கோவிலில் மூலவர் விக்கிரகமே இல்லை.. அண்மையில் மக்கள் முறைப்படி அபிராமி அம்மனை மலைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தும், காவல் துறை பிரச்சினை உருவாகும் என்று கூறி மூலவர் விக்கிரகத்தை அகற்றி விட்டது… இருநூறு ஆண்டுகள் ஆகியும் தங்கள் மலைக்கோவிலில் வழிபட உரிமை கிடைக்காமல் இருப்பது திண்டுக்கல் இந்துக்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம்.. .

View More ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்

குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்… தேவார திருவாசகங்‌களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்‌கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்‌கினோம்…

View More குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!