Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ இந்து மதம் ’

சமூகம், சினிமா

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்க்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல்... [மேலும்..»]

சமூகம், சினிமா

திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு

திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு

திராவிட இயக்கம் தமிழ் சினிமாவைக் கடத்திச் செல்ல ஆரம்பித்த 50கள் வரை தமிழில் பெரும்பாலும் பக்தித் திரைப்படங்களும், இந்து மதப் புராண, இதிகாசங்களின் மேன்மைகளைச் சொல்லும் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. திராவிட இயக்கத்தினர் தமிழ் சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த பிரச்சார உத்தியாகப் பயன் படுத்தத் தொடங்கியதில் இருந்து இந்த நிலை மாறியது. சமூக அவலங்களைச் சாடுகிறோம் என்ற போர்வையில் பெரும்பாலும் இந்து மதக் கடவுள்களையும், இந்து மதப் பாரம்பரியங்களையும், சடங்குகளையும், நம்பிக்கைகளையும் விமர்சித்துக் கேலி செய்யும் திரைப்படங்கள் மெதுவாக தமிழ்த் திரைப்பட உலகில் வரத் தொடங்கின. பராசக்தி போன்ற கருணாநிதியும், அண்ணாதுரை கதை வசனம்... [மேலும்..»]

சமூகம், புதிய இந்து

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தாய் மதம் திரும்பும் விழா – ஒரு நேரடி செய்தி

தருமம் மிகு தூத்துக்குடி செங்கோல் ஆதீன மகாசன்னிதான சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி வீரத்திருமகன் அர்ஜுன் சம்பத் அவர்கள் மற்றும் குமரி மாவட்ட செந்தூரான் பேரவையும் இணைந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 25 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 346 மக்கள் தாய்மதமாம் இந்து தருமத்தில் இணைந்த 'தாய் மதம் திரும்பும் விழா' நாகர்கோவில் அருள் மிகு நாகராஜா திருக்கோவில் அருகில் உள்ள 'அனந்த சமுத்திரம்' திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். [மேலும்..»]

கேள்வி-பதில்

இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

June 14, 2008
-
இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?

மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.) திருவள்ளுவர் உட்பட இந்து... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள்

பல கடவுளரா, ஒரே கடவுளா?

June 9, 2008
-

வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது. எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது. குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் கூட அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் இறைவனைச் சொல் வடிவத்தில் அழைக்கும்போதே அதற்கு ஒரு பெயர் வந்து... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள்

சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

"இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது?" [மேலும்..»]