ஆன்மிகம், போலி ஆன்மிகம், துறவு, சாமியார்கள் : ஒரு கேள்வி-பதில் - ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்
சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்
By ராம்குமார்
Posted in இந்து மத மேன்மை, சமூகம் on 11 February 2010
Stats: பார்வை: 792 and 33 Comments

நாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படையான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.

எம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை…

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 5 February 2010
Stats: பார்வை: 3,100 and 374 Comments

வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ…

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” - பகுதி (1)
By ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
Posted in புத்தக விமர்சனம் on 10 November 2009
Stats: பார்வை: 1,040 and 16 Comments

பெரும் ஆய்வு நாற்காலிகளில் அமர்ந்த இவர்களில் பலர் தம்மைக் கிறித்தவர் என்று கூறிக்கொள்கின்றனரா என்றால் சொல்லமுடியாது. மேலை நாட்டு நிறவெறி, — ’உயர் நாகரிகம் தங்களது; கீழை நாட்டினர் கீழானவர்கள்; நாகரிகம் அற்ற மிருகப் பிராயத்தினர்; காட்டுமிராண்டிகள்; எனவே நாகரிக உலகின் சலுகைகளான பொது நீதி, மதிப்பான அணுகுமுறை, தங்கள் உடைமைகளின் மீதும் கருத்துகளின் மீதும் பிரத்யேக உரிமை பாராட்டத் தகுதியற்றவர்கள்’ — இது போன்ற மனநிலை, இவைதான் அவர்களுக்குள் பொதிந்து இயக்குகிறது என்பது நமது பிரமை பிடித்த பார்வையன்று என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது பல சமயங்களில் அவர்களுடைய சொல்லாடல்களும், அவற்றின் தொனியும்.

ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்
By தமிழ்செல்வன்
Posted in இந்து மத மேன்மை, சமூகம், மகளிர் on 6 November 2009
Stats: பார்வை: 8,489 and 217 Comments

நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.

பவானி காதலிக்கிறாள்
By மது
Posted in இந்து மத மேன்மை, கதைகள் on 21 September 2009
Stats: பார்வை: 2,559 and 105 Comments

[மூர் நாம் அவர்களின் 'The Principle Of Adaptation' என்கிற புனைவைத் தழுவியது]
[மூலம்: http://moor-nam.sulekha.com/blog/post/2004/12/the-principle-of-adaptation.htm]
-0-
‘அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே..’ குழைவான கிறங்கடிக்கும் குரலில் சித்ரா பாடிக் கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி கொண்டாடி விட்டு, முறுக்கும் சீடையும் தின்று மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தேன். “சீசந்திக்கு காசு…” வாசலில் இரண்டு மூன்று குழந்தைகள் சிறு தேர் செய்து, கிருஷ்ணர் படத்தை அதில் வைத்து இழுத்து வந்து, வீட்டின் முன் நின்று கூவினர்.
“பவானி…,” குரல் கொடுத்தேன். கல்லூரி விடுமுறை ஆதலால் இன்று [...]

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை - நூற்றாண்டு நினைவுகள்
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in நிகழ்வுகள், வரலாறு, வழிகாட்டிகள் on 17 August 2009
Stats: பார்வை: 743 and 11 Comments

” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..

பலுசிஸ்தானின் சுதந்திரப் போர்
By ஆசிரியர் குழு
Posted in அரசியல் on 16 August 2009
Stats: பார்வை: 753 and 8 Comments

அப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து…

ஆலயம் என்னும் அற்புதம்
By வெங்கட் சாமிநாதன்
Posted in ஆன்மீகம் on 9 February 2009
Stats: பார்வை: 1,077 and 8 Comments

கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்… இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்…

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு
By நமது நிருபர்
Posted in நிகழ்வுகள் on 28 January 2009
Stats: பார்வை: 1,116 and 18 Comments

தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்… புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன…

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!
By வினோத் ராஜன்
Posted in ராமாயணம் on 16 January 2009
Stats: பார்வை: 1,063 and 8 Comments

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் “இஸ்லாமுக்கு எதிரானவை” என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன…

ஆ! அசின்
By ஜயராமன்
Posted in சமூகம் on 14 January 2009
Stats: பார்வை: 978 and 10 Comments

இந்தக் கட்டுரைக்கு ‘காட்மண்டுவில் கஜினிகள்’ என்றுதான் தலைப்பு வைக்க இருந்தேன். முன்னாள் இந்துதேசம் நேபாளத்தில், இந்துக்களின் மிகப் புனித ஆலயம் பசுபதிநாத் சிவன் கோவில் தாக்கப்பட்டு களங்கப்படுத்தப்பட்டது. இந்தியன் என்ற ஒரே காரணத்தால், தலைமை அர்ச்சகர் தாக்கப்பட்டு, வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார்…

அழிவிலிருந்து மீண்டெழுவோம் - தருண் விஜய்
By ஜயராமன்
Posted in பயங்கரவாதம் on 7 January 2009
Stats: பார்வை: 592 and 2 Comments

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம்.

மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும்.

‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை - 1
By விஸ்வாமித்ரா
Posted in சினிமா, நிகழ்வுகள் on 5 December 2008
Stats: பார்வை: 781 and 3 Comments

இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? என்ன செய்தார்கள்? பார்க்கலாமா?

வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி
By ஆசிரியர் குழு
Posted in சினிமா on 21 November 2008
Stats: பார்வை: 701 and 10 Comments

வில்லனாகவே நடித்த நல்லவர் எம்.என். நம்பியார் காலமாகிவிட்டார். சுமார் 66 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்ற நம்பியார் ஒரு பேட்டியில் கூறினார், “விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். கடவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.” இந்த அரிய பேட்டியைப் படியுங்கள்…

தாய்ச் சமயம் திரும்பும் திருவிழா
By ஆசிரியர் குழு
Posted in சமூகம், புதிய இந்து on 28 August 2008
Stats: பார்வை: 302 and 2 Comments

தாய்நாடு காக்க, தாய்மொழி காக்க, தீண்டாமையை ஒழிக்க, சாதி ஏற்றத் தாழ்வுகளை நீக்க, இந்து ஒற்றுமை காத்திட தமிழன்பர்கள் பலர் தாய்மதமாம் இந்து மதம் திரும்பும் திருவிழா வரும் ஞாயிறன்று (31-08-2008) நாகர்கோயிலில் நிகழவிருக்கிறது. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
By ஆசிரியர் குழு
Posted in சமூகம் on 20 August 2008
Stats: பார்வை: 1,675 and 33 Comments

“தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது…” -
தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்
By ஆசிரியர் குழு
Posted in இந்து மத விளக்கங்கள், விவேகானந்தர் on 8 July 2008
Stats: பார்வை: 831 and 2 Comments

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள்.



"));