அஞ்சலி: நெல் ஜெயராமன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் (வயது 50) காலமானார். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. நெல் ஜெயராமன் தமிழகத்தின் அத்தனை திசைகளிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார். நெல் திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விவசாய ஆய்வாளர்களைப் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ ,மாணவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து விவசாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இலட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபட வைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலம், உலக விவசாயிகளின் பார்வையை காவிரி டெல்டா பக்கம் திரும்பச் செய்தார்…

View More அஞ்சலி: நெல் ஜெயராமன்

இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

தஞ்சை மாவட்டத்தின் இயற்கை வழி விவசாயிகள் ஒருங்கிணைந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை…

View More இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி… பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன…. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது… அழைப்பிதழ் கீழே, அனைவரும் வருக…

View More திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா