Posts Tagged ‘ இராமாயணம் ’

இலக்கியம்

எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

July 12, 2011
-
எல்லைகள் தகர்க்கும் இலக்கியத்தின் ஆற்றல்

தமிழர் பெருமிதம் கொள்ளும் சீனத் தொடர்பு, அராபிய வணிகத் தொடர்பு, கீழ்த்திசை நாடுகளின் தொடர்பு இவற்றுக்கும் முன்பாகவே ஒரு நீடித்த வடபுலத் தொடர்பிருந்ததை பாரதத்தின் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.... அடிகளாரின் விரிந்த பார்வையின் விளைவே சிலப்பதிகாரக் காப்பியம்... பாகவதத்தை முன்மாதிரியாகக் கொண்டு தேவகுமாரனான, தேவதூதரான இயேசு பிரானுக்கும் கடந்த நூற்றாண்டில் தேவசி என்பவர்... பேரா. வையாபுரிப் பிள்ளையவர்களின் பல்சந்த மாலை இஸ்லாமிய இலக்கியத்தைச் சார்ந்தவை... இவர் தொகுத்த ’ப்ரதானப்பெட்ட மதிலகம் ரேககள்’ (Important Temple Records) அநந்தபுரம் ஆலயத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்ட ஆபரணக் குவியலைப் பதிவு செய்துள்ளது... இலக்கிய ஈர்ப்பும் இறையுணர்வும் இனிய கவிதைகளும்...

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது... கைகேயி இராமனை, 'உங்கள் மகன்' என்றோ, 'கோசலை மகன்' என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல 'சீதை கேள்வன்' என்று குறிப்பிடுகிறாள்... இராமன், 'என் தாய்' என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், 'என் தெய்வம்' என்கிறான்... "இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்," என்கிறாள் சீதை... கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

மேலும் »

ஆன்மிகம், தொடர், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய்

மேலும் »

இந்து மத மேன்மை, பண்டிகைகள்

அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை

அஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை

இராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு... இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி... ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.

மேலும் »

வரலாறு

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன... மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது...

மேலும் »

ராமாயணம்

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

மலேசியாவில் இராமாயணம் பாரம்பரியமிக்க வயங்க் என்னும் நிழல்கூத்து மூலம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அண்மைக் காலங்களில் இத்தகைய அழகிய கலைவடிவங்கள் "இஸ்லாமுக்கு எதிரானவை" என்று அறிவிக்கப்பட்டு, எதிர்க்கப்படுவதால், அவை முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன...

மேலும் »

கம்பராமாயணம்

நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண உரை

June 12, 2008
-

நடிகர் சிவகுமார் சமீபத்தில் சென்னையில் மக்கள் தொடர்பு அமைப்பின் சார்பில் நிகழ்த்திய கம்பராமாயண உரையை இங்கு நீங்கள் கேட்கலாம். நன்றி: பாட்பஸார்.காம்

மேலும் »

கம்பராமாயணம்

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

கம்ப ராமாயணம் – மூலம், உரை, மொழிபெயர்ப்பு

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. எல்லா உலகங்களையும் ‘உள’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம்.

மேலும் »

ராமாயணம்

கம்பனின் கும்பன் – 2

கம்பனின் கும்பன் – 2

" அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? "

மேலும் »

வைணவம்

சிறிய திருவடி

சிறிய திருவடி

பாதங்கள் இவை என்னில்… இறைவனுடைய திருவடியைப் பாடுவதென்றால் ஒரு தனி மகிழ்ச்சி பிய்த்துக் கொண்டு போகும் கவிஞர்களுக்கு. ‘மொத்தம் மூணு இடங்களில் அவனுடைய திருவடி பட்டது’ என்று சொல்கிறார் அருணகிரி நாதர். ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ அவன் பயணப்படுவதற்காக ஏறி உட்கார்கிறான் பார், மயில், அது மேல அவன் அடியிணை பட்டது. அங்கே மட்டுமா பட்டது? இல்லை; தேவர்களின் பகையை அழித்தவன்; இந்திரனுக்கு அவன் உயிரையும், இந்திராணிக்கு அவள் மாங்கல்யத்தையும் மீட்டுத் தந்தவன் ஆகையினாலே தேவர்கள் எல்லோரும் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகிறார்கள். அந்தக் காரணத்தினாலே அவர்கள் தலையிலும் பட்டது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும், தேவர்கள் தலையிலும்’....

மேலும் »