இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன்?

சாதாரண மனிதர்களுக்கு பனி என்பது ஒரே விதமாக வெண்மையாகவே தென்படும். எனவே ‘பனி’ என்றால் எல்லா பனியும் ஒன்றே என்று எண்ணுவோம். ஆனால் பனியோடு அதிக சமீபத்தில் வாழும் துருவப் பிரதேசவாசிகளான எஸ்கிமோக்களுக்கு பனியில் பல ரகங்களைத் தெரியும்.
பனியில் 48 விதங்கள் இருப்பதாக அவர்களின் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அத்தனை வித பனிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு ஏற்படக் காரணம் பனியோடு அவர்களுக்குள்ள அருகாமையும், நெருக்கமுமே. அதைப்போல ‘ஒன்றே கடவுள்!’ என்று உணர்ந்து நிரூபித்து விளக்கிய போதிலும் கடவுளோடு அதிக நெருக்கமும் முழுமையான அனுபவமும் பெற்ற காரணத்தால் இறைவனை அனேக வித தேவதைகளின் வடிவத்தில் ஹிந்து தர்மம் தரிசிக்க முடிந்தது. விவரிக்கவும் முடிந்தது. கடவுளோடு அப்படி ஒரு நெருங்கிய, நித்தியத் தொடர்பு கொண்ட உண்மையான தெய்வ தரிசனம் ஹிந்துக்களுடையது…

View More இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன்?

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

எவனது மனம் உமது இணையடித் தாமரையை வணங்குகிறதோ, அவனுக்கு இப்புவியில் கிடைத்தற்கு அரியது தான் எது? பவானியின் பதியே! மார்பில் உதைபடுவோமோ என்று அஞ்சி காலன் ஓடிப்போகிறான். தங்கள் கிரீடங்களில் மிளிர்கின்ற மொக்குப் போன்ற ரத்தின தீபங்களால் தேவர்கள் கர்ப்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். முக்தி என்ற மாது அவனை இறுகத் தழுவிக் கொள்கிறாள்…. பிரம்மச்சாரியோ, க்ருஹஸ்தனோ, ஸன்யாஸியோ, ஜடாதாரியோ அல்லது வேறு எந்த வித ஆஸ்ரமவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஆகிவிட்டது? பசுபதே! சம்போ! எவனது இதயத் தாமரை உம் வசமாகிவிட்டதோ, நீர் அவன் வசமாகிவிட்டீர்! அதனால் அவனது பிறவிச் சுமையையும் சுமக்கிறீர்…. சிரசில் சந்திரகலை மிளிர்பவரே! ஆதியிலிருந்து இதயத்துள் சென்று குடி புகுந்த அவித்தை எனப்படும் அஞ்ஞானம் உமதருளால் வெளியேறி விட்டது. உமதருளால் சிக்கலை அவிழ்க்கும் ஞானம் இதயத்துள் குடி புகுந்தது. திருவினைச் சேர்ப்பதும், முக்திக்குத் திருத்தலமானதும் ஆன உமது திருவடித் தாமரையை யாண்டும் ஸேவிக்கிறேன்; தியானிக்கிறேன்….

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2

ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்…. குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை…

View More ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்…. அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்… யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் – ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே…

View More [பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்

இறையுணர்வு என்பது அனைத்தையும் வெறுத்து அகல்வது என்று ஆகாது. உலகுடன் ஒன்றி நின்று அனைத்துயிர்களும் இறைவடிவாக இலங்கும் உண்மையைத் தெரிந்து, அவற்றினிடத்தன்பு கொண்டு, எல்லாம் இறைமயம், இன்பமயம் என்று கண்டு இறைவனுக்கு ஆட்பட்டு வாழ்கின்ற எளிய வாழ்விலும் இறையுணர்வு கைகூடப் பெறலாம். எனவே அகத்துறவே இறையுணர்விற்கு அடிப்படையானது என்பது தெளிவாகின்றது. ‘யான்’, ‘எனது’ என்று நம்மையறியாமலே நம்மிடத்து ஓங்கி வளர்ந்துள்ள செருக்குணர்வு ஒன்றைனையே நாம் வேருடன் களைய வேண்டும்… தோரோ, எமர்ஸன், விட்மன் முதலான அமெரிக்க அறிஞர்தம் கருத்துகளை இவண் எடுத்துரைப்பது நம் இந்து சமயத்தின் பெருமையைக் காட்டுவதற்காக அன்று ; எந்நாட்டவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அடிப்படையான தத்துவக் கருத்துகள்…

View More [பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்