காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

பாரதப்பிரதமர் தொடங்கி வைத்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கையிலிருந்தும் காசிக்கு காலகாலமாக அறிஞர்களும் பக்தர்களும் பயணித்திருக்கிறார்கள்… இலங்கையின் பல பாகங்களிலும் காசி விஸ்வநாதருக்கு பேராலயங்கள் உள்ளன. புனித யமுனை நதி நீரை எடுத்து வந்து நல்லூரில் யமுனா ஏரியில் அந்த தீர்த்தத்தை சேர்த்ததாகவும் ஐதீகம்… காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளோடு கூட, காசிக்கும் இலங்கை சைவ தமிழர்களுக்கும் உள்ள தொடர்பும் கூட இவ்வேளையில் சிந்திக்கப்பட வேண்டும்…

View More காசி – இலங்கைத் தமிழ் கலாசார பிணைப்புகள்

திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்

தென்னகத்தின்[தக்காணம்] செல்வச்செழிப்புள்ள இந்துக்கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதைக் குறிக்கோளாகக்கொண்ட போர்ச்சுகீசியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கேதீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றிபெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ்வரம் கோவிலின் அறங்காவலரான இராமநாதபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகாப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.
“பொது ஆண்டுக்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக் கடற்கரையிலிறங்கிய இளவரசன் விஜயன், பல்லாண்டுகளாகச் சிதிலமடைந்து கிடந்த திருக்கேதீஸ்வரம் கோவிலைக் கட்ட ஏற்பாடுசெய்தான்.”

View More திருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்