Posts Tagged ‘ உருவ வழிபாடு ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 5

இராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால், பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில் இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில் குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும். ஆகையால், பரப்பிரம்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு...

மேலும் »

இந்து மத மேன்மை, கலைகள், பொது, வரலாறு

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்... துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு.

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம்

பணிப்பொன்

பணிப்பொன்

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம்

மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

மனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை

அத்வைதத்தை அறிவியல் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.ஆனால் ஆஸ்த்மாவை அறிவியல் சரியாகவே கையாள்கிறது. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது... அர்ஜுனன் நம்மைப்போன்ற நிலையில் ஒரு கேள்வியை கேட்கிறான் - ஆன்மீகப்பயிற்சியில் ஈடுபடும் ஒருவன் நம்பிக்கை இருந்தும் நடுவில் வழி தவறினால் அதுகாறும் செய்தபயிற்சி வீண்தானா? என்று. இதற்கு பதில் அளிக்கும் பகவான் எவ்வளவு குறைந்திருந்தாலும் ஆன்மீகப்பயிற்சிகள் வீணாவதில்லை. தோல்வி அடையும் ஒருவன் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய பயிற்சியை தொடருவான் என்று கூறுகிறார்.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், கலைகள்

இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை

இந்து தாலிபானியம்…?  – ஒரு எதிர்வினை

ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? ... இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப்படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால் சாதிப்பவராக இருக்க வேண்டும்.

மேலும் »

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தரவிறக்கம், பொது

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது... சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் - இங்கே ...

மேலும் »