Posted in அனுபவம், வரலாறு on 19 August 2010
Stats: பார்வை: 928 and 42 Comments
ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது… முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை… சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்…
Posted in அரசியல், சமூகம், நிகழ்வுகள் on 21 July 2010
Stats: பார்வை: 1,873 and 97 Comments
”.. ஸ்டீபனும், அருள்ராஜும் பழிப்பு காட்டிட்டுப் போறானுங்கம்மா.. நம்ப அவங்களை விட ரொம்ப ஏழைங்க தான? பின்ன ஏம்மா எனக்குப் பணம் தரல?” … இந்து மாணவர் சமுதாயத்திற்கு செய்யப்படும் இதுபோன்ற துரோகத்தை பாஜக ஏற்றுக் கொள்ளாது. மதமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் வாக்குகளை அறுவடை செய்ய திமுக தயாராக இருக்கிறது.. ஜூலை 25ம் தேதி கன்னியாகுமரியில் ஒரு லட்சம் பேர் திரளும் மிகப் பெரிய போராட்டம்…
Posted in சமூகம், நிகழ்வுகள், நேர்காணல், பொது, வீடியோ on 13 July 2010
Stats: பார்வை: 892 and 23 Comments
அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் - இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அரசுத் துறையினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.. நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில்…
Posted in அனுபவம், இலக்கியம், பொது on 12 July 2010
Stats: பார்வை: 1,355 and 25 Comments
‘உழைக்கும் மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் முதுகெலும்பை உடைத்து, அதன்மீது அவன் கட்டியவை இந்தக் கோயில் கோபுரங்கள்’… சாரு நிவேதிதா அப்போது முற்போக்கு முகாம்களால் இந்துத்துவ வாதி என்று வசைபாடப் பட்டார். காந்தி முதல் கண்ணதாசன் வரை எல்லாரும் கீதையைப் பற்றி எழுதியிருக்காங்களே? அவங்க எல்லாம் பார்ப்பனீயத்தின் பாதுகை தாங்கிகள்.. இந்துத்துவ முத்திரை என்பது ஒரு சர்வப்ரஹரண ஆயுதம் - இந்த அஸ்திரத்தால் குத்துப் படாத ஆளே இல்லை, அதை அவ்வப்போது எடுத்துப் பிரயோகிப்பவர்கள் உட்பட!
Posted in சமூகம், நிகழ்வுகள், பயங்கரவாதம் on 10 June 2010
Stats: பார்வை: 1,369 and 24 Comments
கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம். காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத் தான் செயல்படுகின்றன.. கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார், இஸ்லாமிய மதத் வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப் படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
Posted in சமூகம், தேசிய விழாக்கள், பொது, வரலாறு on 1 May 2010
Stats: பார்வை: 817 and 20 Comments
மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?
Posted in சமூகம், பொருளாதாரம், வழிகாட்டிகள் on 30 April 2010
Stats: பார்வை: 778 and 7 Comments
சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.
Posted in அரசியல், தொடர், வரலாறு on 27 April 2010
Stats: பார்வை: 690 and 6 Comments
எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை - வரலாற்றை - தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை - நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை. அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்…
Posted in சினிமா on 29 March 2010
Stats: பார்வை: 2,378 and 25 Comments
‘அண்ணாச்சி’ முருக பக்தர் என்றாலும், அவருக்கு வேலுக்கும் சேவல் கொடிக்கும் நடுவில் இருப்பது முருகன் அல்ல, லாபம் மட்டும்தான். சுபம் அல்லாத லாபம்.. இரக்கமின்றி கண்காணிக்கப்பட்டு வதைத்தே விலங்குகளாக வைக்கப்படும் அந்த இடத்திலும், அனைத்து இயந்திரத்தனமான மானுடம் மறந்த மனிதர்களின் சிறைகளை உடைத்துக் கொண்டு, உயிர்த் துடிப்பு தன்னை, தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
Posted in சமூகம், தொடர், பொது, வரலாறு, வழிகாட்டிகள் on 4 March 2010
Stats: பார்வை: 795 and 3 Comments
“ஸ்ரீ ஐயன் காளியின் ஆக்ஞைக்கு இணங்க நமது சகோதரிகளின் கல்மாலைகளை அறுத்தெறியவே நாம் முழு சம்மதத்துடன் இங்கு கூடியிருக்கிறோம்.” அம்மேடையிலேயே அருவாள் கொண்டு கல்மாலைகள் அறுத்தெறியப் பட்டன.. ”எனது இனத்தவர்களுக்கு வீடோ, பூஜை நடத்த கோவிலோ கிடையாது. எனவே இவ்விஷயத்தில் வேறு சமுதாயத்தினருக்குச் செய்வதை விடக் கூடுதலாக எங்களுக்கு அரசாங்கம் செய்து தரவேணுமென்று வேண்டுகிறேன். எங்கள் தேவைகளுக்காக கிணறுகளும், கோயில்களும் நிர்மாணித்துத் தரவேண்டும்”
Posted in சமூகம், பொது, வரலாறு, வழிகாட்டிகள் on 26 February 2010
Stats: பார்வை: 989 and 10 Comments
ஒருநாள் ஐயன் காளி விளையாடிக் கொண்டிருந்த பந்து பக்கத்தில் இருந்த ஒரு நாயர் வீட்டில் விழுந்த போது அந்த நாயர் வந்து ஐயன் காளியை எச்சரித்தான். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார்… நினைவுகூர்ந்த ஐயன் காளி, ‘ஒரு புலையர் பெண் செய்த வேலையை, அட ஆறு நாயர் ஆண்கள் சேர்ந்து செய்ய முடியவில்லையே!’ என்றார்.
Posted in இந்து மத மேன்மை, சமூகம், தொடர், பொது on 16 February 2010
Stats: பார்வை: 1,186 and 21 Comments
ஆரிய-திராவிட இனவாதம் பொய் என்றால், சாதி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது? முன்னேறிய நாடுகளில் இப்போது சாதி முறை இல்லையே. இந்தியாவில் தானே இந்த அளவு உள்ளது? .. அந்தணரான சுந்தரமூர்த்தி நாயனார் “திரு நீலகண்டத்துப் பாணர்க்கு அடியேன்” என்று தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்கிறார். இதே போன்ற பாணர்களைத்தான் செயின்ட் அகஸ்டைன் பாவப் பிறவிகளாகக் கருதினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Posted in புத்தக விமர்சனம் on 21 January 2010
Stats: பார்வை: 1,278 and 9 Comments
மனிதன் தன் சக மனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன், அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான், அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும்.
Posted in சமூகம், பொருளாதாரம் on 16 November 2009
Stats: பார்வை: 1,057 and 6 Comments
பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வாதிடுபவர்கள், இப்போதுள்ள சில்லறை வியாபாரிகள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்கியுள்ள, நல்கிவரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்… இந்தியாவில் சில்லறை வியாபாரம் அமைப்பு சாரா நிலையில் உள்ளது. இது பாரம்பரியமானது. சமூகம் சார்ந்தது. செலவு குறைவானது. உழைப்பு செறிவு மிக்கது.
Posted in அரசியல், பொது on 1 September 2009
Stats: பார்வை: 983 and 5 Comments
அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.
Posted in சமூகம், பொது, பொருளாதாரம் on 19 July 2009
Stats: பார்வை: 694 and 6 Comments
விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….
Posted in பொருளாதாரம் on 25 March 2009
Stats: பார்வை: 921 and 8 Comments
… இதே மாதிரி இந்தியத் தயாரிப்பு கிடைக்கிறதா என்று கடை முழுதும் வலைவீசித் தேடினோம். ம்ஹூம், ஒன்றும் அகப்படவில்லை….
இந்தியா, சீனாவுக்கிடையேயான வர்த்தகம் சமீபகாலமாக சராசரியாக ஆண்டுக்கு 50 சதவீதம் என்ற கணக்கில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகம் சீனாவுக்கே முற்றிலும் சாதகமாக இருக்குமாறு சீனா காய் நகர்த்துகிறது. இந்தியா ஏற்றுமதி செய்து கணக்குத் தீர்க்கும் அளவை விட மிக அதிக அளவில் விலையும், தரமும் குறைந்த பொருட்களை சீனா இந்தியாவில் கூளமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்