அஞ்சலி: அப்துல் கலாம்

ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை… தன்னளவில் மிக அமைதியான, ஆன்மீகமான, மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார். கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின், “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்…

View More அஞ்சலி: அப்துல் கலாம்

எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

புதிய கொள்கைகள், பெரிய திட்டங்கள், பெரிய கட்டமைப்புகள் மூலம் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வருவது ஒரு வழி.
சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதை மக்களின் இயக்கமாக மாற்றி பெரும் அளவில் செய்வது இன்னொரு வழி. இரண்டு வழிகளும் வளர்ச்சியை கொண்டுவரும்… அரசில் இருக்கும் நாங்கள் எப்போதும் ஒரு கேள்வியை கேட்கிறோம், எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது. அதற்கு என்ன வகையான பலன் கிடைக்கிறது? இதற்கு அரசு அலுவலகங்கள் திறமையாக செயல்படவேண்டியிருக்கிறது. இதற்கு சில சட்டங்களை மாற்ற வேண்டி இருக்கிறது… முன்னேற்றம் என்பது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் என்பவை எல்லாம் வேலைவாய்ப்புகள் இல்லையேல் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும். நமக்கு உற்பத்தி மட்டும் தேவையில்லை, வெகுஜன மக்கள் செய்யும் பெரும் உற்பத்தி தான் தேவை…. பல நாடுகள் வருமானத்தால் பணக்கார நாடுகளாக இருக்கிற போதிலும் சமூக அமைப்பில் ஏழைகளாக இருக்கின்றன. சமூகத்தை ஒன்றாக பிணைக்கும் அவர்களின் குடும்ப அமைப்புகள், நம்பிக்கை முறைகள், சமூக உறவுகள் ஆகியவை சிதறியுள்ளன. நாம் அந்த வழியில் போகக்கூடாது. நமக்கு சமூகமும் பொருளாதாரமும் இணைந்து செயல்படுதல் வேண்டும்…

View More எனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8

பொதுநலனைக் கொண்ட சமூகம் இயற்கையிலேயே உறுதி அற்றது. சுயநல உறுப்பினர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு அதில் உள்ளது…. தன் தேவைக்கேற்ற பூக்களை தானாகவே உற்பத்தி செய்து கொண்டிருந்த மரங்கள், இன்று இலைகள் இல்லாத கிளைகளைக் கொண்டதால், பூமழை பெய்யுமா என்று வானை நோக்கி பிச்சை கேட்கின்றன… “நான் அப்படி ஆசைப்பட வில்லை. நான் எதிர்பார்க்கும் இந்தியாவில், இளவரசர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் இடங்கள் இருக்கவே செய்கின்றன” என்றார் காந்திஜி… ஏழைகளுக்கு உதவாமல் போனாலும் கூட, அறிவியல் ஆராய்ச்சியில் பின் தங்கமுடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூற நம்மில் தலைவர்கள் இல்லை….

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8