இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பைத் தேடிவந்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு — எந்தவிதமான உரிமையோ, அதிக ஊதியமோ இல்லாது அனுதினமும் உழைக்கும் அந்த வாயில்லா[?] ஜீவன்களுக்கு குடியுரிமை வேண்டுமென்றால் அரபுமொழி நன்கு எழுதப்படிக்கப்பேசத் தெரிந்டிருக்கவேண்டும் என்று சொல்லும் அரசு, இது எதையும் எதிர்பார்க்காது, அரபுமொழியே தெரியாத ஒரு ரோபாட் பெண்ணுக்குக் குடியுரிமை எப்படி வழங்கியது என்று பலரும் கேள்விக்கணை தொடுக்கிறார்கள். தலைநகரான ரியாதில் இருபது சதவிகிதமே தரைக்கடி சாக்கடை வசதி உள்ளது.  இந்த அரசு அடிப்படைத் தேவையையே நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, ரோபாட்டுகளுக்காகப் புது நகரை உருவாக்க முனைகிறதே என்ற கோபமே அது. “வீட்டைவிட்டு வெளியே வர இயலவில்லையே என்று பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இங்கிருக்கும்போது ஸோஃபியா தன்னிஷ்டத்திற்கு அலைந்து திரிவது எங்ஙனம்?” என்று வெதும்புகிறார் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரான அலி அல் அகமது.

View More இஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….

View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரனமான இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

View More சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)