புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

கிறிஸ்தவ ‘அருட்பணியாளரான’ ஜே.எஃப். ஸ்பென்ஸர் இந்த பஞ்சத்தின் கொடுஞ் சூழலை ஆண்டவர் கொடுத்த கருவி என மகிழ்ந்து களிகூர்ந்தார். ரட்சகராகிய ஏசுவின் பக்கம் நம்பிக்கையைத் திருப்ப இந்தியர்களுக்குத் தேவையான அடக்க உணர்வை அளிப்பதற்காக ஆண்டவன் பயன்படுத்தும் கருவிதான் பஞ்சம், நிகழ்காலத்தில் ஏசு நிகழ்த்தும் அற்புதமே இந்தப் பஞ்சம் என அவர் மெட்ராஸ் மெயிலில் எழுதினார்…. தலித்துகளிடையே அயோத்தி தாசர் இரண்டு பிரிவுகளை வகுக்கிறார். ஒரு பிரிவு தாழ்ந்த சாதி. இன்னொரு பிரிவு தாழ்த்தப்பட்ட சாதி. குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாமாகவே தாழ்ந்த சாதி என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றால் பிறரால் வஞ்சகமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு பிரிவினரை முதல் பிரிவினரோடு சேர்த்து ‘பஞ்சமர் ‘ என்று பெயரிட்டதை தாசர் ஆட்சேபித்தார்… இந்த நாவல் அதி நாடகத்தன்மையுடனும் உணர்ச்சிகர உச்சங்களுடனும் எழுப்பும் வரலாற்றுணர்வு, ஒரு பக்கம் குற்ற உணர்வாகவும், மறுபக்கம் வெறும் வெறுப்புமிழும் தன்மையும் கொண்டதாக அமைந்துவிடுகிறது. எனவே வரலாற்றுத் தரவுகளில் அதை பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது….

View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2

பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் ”ஈ.வெ.ராவின் மறுபக்கம்” என்ற இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை. அவர் ஒரு இளைஞர்….இன்றைக்கு நாம் ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன்….

View More பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

பெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை

ஹிந்து சமுதாய ஒற்றுமை, சமத்துவம், சமரசம் ஆகியவற்றுக்காக உழைத்த பெரும் தேசிய தலைவர் எம்.சி.ராஜா ஆவார். தம்மை தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என தம் பெயர் குறித்து கவலையின்றி தேசத்துக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்து தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும் இந்து சமுதாயத்துக்காகவும் உழைத்த உத்தம பெரியவர் அம்மகான்….

View More பெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக்…

View More புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்

“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற…

View More ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்

பாரதி: மரபும் திரிபும் – 3

”நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப் பட்டது… சூழ்ச்சிக் கொள்கையை மக்கள்முன் வைத்துத்தான் கபடநாடகம் ஆடி நீதிக்கட்சிக் காரர்கள் ஆட்சிக்கு வந்தனர் என்கிறார் எம்.சி.ராஜா… .’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்… நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்– மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

View More பாரதி: மரபும் திரிபும் – 3

தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

தமிழ்ஹிந்து இணையதளம் குறித்து ஒரு விளம்பரம்.. இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் – தமிழ்ஹிந்து பரிந்துரை.. கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – அரவிந்தன் நீலகண்டனின் புதிய நூல்! … இரண்டு நூல்கள் தான் இந்த வருடக் கண்காட்சியைக் கலக்கப் போகும் அரசியல்/சமூகவியல் புத்தகங்கள் என்று பல புத்தக நோக்கர்கள் ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்… விஜயபாரதம் அரங்கில் தமிழ்ஹிந்து வெளியீடுகள் கிடைக்கும்..

View More தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

[பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.

View More [பாகம் 11] இந்து மதமான சீக்கிய மதத்துக்கு மாறுவோம்

[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[….] [தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.

View More [பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !