இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள்….

View More இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

எழுமின் விழிமின் – 23

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள்…. எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?.. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது….

View More எழுமின் விழிமின் – 23

எழுமின் விழிமின் – 8

தாழ்த்தப் பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனை அற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே !… மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது?” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. ‘குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்’ – ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ?…இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்…

View More எழுமின் விழிமின் – 8

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

அமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…

View More கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!

கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1

வேலைவாய்ப்பின்மைதான் தீவிரவாதத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு லண்டன் குண்டுவெடிப்புடன் அடக்கம் அடைந்தது. மேற்கத்திய நாடுகளில் குடியேறி அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகளை கண்டுவிட்டால், வேற்றின குடியேறிகள் மேற்கத்திய சமூகத்துடன் ஒன்றிணைந்து விடுவார்கள் என்ற வாதமும் சமாதி அடைந்தது… அந்நாடுகள் அளிக்கும் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டே அந்நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படையாக ஏசுகின்றனர்.

View More கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 1

இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ பாதிரிகளும் இங்கு வந்து கல்வி சேவை செய்யாமலிருந்திருந்தால் இந்த மனுவாத பிராம்மணீய இந்து மதம் நம்மையெல்லாம் கல்வியறிவில்லாத மூடர்களாகவேதான் வைத்திருக்கும். இன்றைக்கு இந்த மண்ணின் கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி கிடைத்திருக்கிறது என்றால் அது கிறிஸ்தவமும் மிஷினரிகளும் போட்ட பிச்சை…. இது பல நேரங்களில் பல மேடைகளில் பேசிக் கேட்ட விஷயம்தான். …… அவர்கள் சொல்வதில் என்ன தவறு என்றுதான் பெரும்பான்மையான ஹிந்துக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்…..ஆனால், உண்மை என்ன என்பதைச் சிறிது ஆழமாக வரலாற்றைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

View More இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?

வேற்றுலகவாசிகள் என்றால் அறிவுடைய ஒரு பண்பாடாகத்தான் அவர்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. நிச்சயமாக நுண்ணுயிரிகளாவது இருக்க வாய்ப்புள்ளது அல்லவா? … அவர்களின் அறிவியலும் அறிதல் முறையும் எவ்வாறு இருக்கும்? அவர்களின் உலகில் இசை இருக்குமா? … விண்மண்டலங்களுக்கு இடையே, பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் விளங்கும் இரு வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பிரபஞ்ச பொது மொழியாக கணிதம் அமையும். அத்வைதி இவ்வுண்மையை புன்னகையுடன் ஆமோதிப்பான்.

View More வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?