மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….

View More மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா?
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

View More இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா

இரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்….. எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு சபைகளும் அங்கீகரித்து ஒரு முடிவுக்கு வரும் வரை ஒரு சில பணியாளர்கள் தவிர பிறர் வேலைக்கு வர வேண்டாம் வீட்டில் இருங்கள் அல்லது பீச்சுக்குப் போங்கள். பின்னால் சொல்லி அனுப்புகிறோம் என்று கட்டாய சம்பளமில்லாத விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நமது தமிழ் பத்திரிகைகளின் அமெரிக்க நாட்டு வல்லுனர்கள் எழுதுவது போல எவரும் டிஸ்மிஸ் செய்யப் படவில்லை அமெரிக்கா நிதி இல்லாமல் மஞ்சக் கடுதாசிக் கொடுத்து போண்டியாகவும் இல்லை….

View More குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா

அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….

மோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால் குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது.

View More அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….

வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?

கலிபோர்னியாவில், செரிட்டாஸ் என்ற இடத்தில் வசிக்கும் ‘நகோலா பாசிலி’ (Nakola Bacile) என்ற அமெரிக்கன் தான் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவன்… அமெரிக்கச் சதியோ, கிறிஸ்தவச் சதியோ, ஏதாகிலும் இருக்கட்டும். அதற்கு, சென்னை, அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சாதாரண மக்களின் வாகனங்கள் என்ன பாவம் செய்தன?… நம்பாத பிற மதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்வு இஸ்லாமியர்களிடம் மண்டிக் கிடக்கிறது… சென்னையில் நடந்த முஸ்லிம்களின் வன்முறை வெறியாட்டத்தை தமிழில் ‘தினமணி’ நாளிதழ் (20.09.2012) மட்டுமே கண்டித்தது… அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும்… அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்…

View More வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்… குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்… எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும்? யூனியன் மாஃபியா கும்பலை “நேருக்கு நேராக” எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது… உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன…

View More கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4

.. “புதிய ஓய்வூதிய திட்டத்தின்” மூலம் ஓய்வூதியம் பெற்றிருந்தால், அவருக்கு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது 25000 ரூபாயாக கிடைத்திருக்கும். ஆனாலும் பொருளாதாரம் தேக்கநிலையில் இருக்கும்போது அது 10000ஆக குறையவும் வாய்ப்பு உண்டு. இதில் என்ன தவறு காண முடியும்? பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்போது, இந்தியாவில் கோடிக்கணக்கான பொதுமக்கள் வேலைகளை இழந்தும், பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் சொகுசாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நேர்மையற்ற, துணிவற்ற, வாதம்?..

View More கம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4

அமெரிக்காவிலும் ஆலமரம்

..உட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. ..200 வருடங்களாக கிருத்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது…

View More அமெரிக்காவிலும் ஆலமரம்

பின் லேடனை விட மாபெரும் அபாயம்

உலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது [..]இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம்?

View More பின் லேடனை விட மாபெரும் அபாயம்

கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2

பிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது…”Patriotic Indian Americans” என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல!… ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.

View More கலாசார பன்முகத்தன்மையின் தோல்வி?: ஒரு பார்வை – 2