இருளும் வெளியும் – 1

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.

View More இருளும் வெளியும் – 1

ஈசாவாஸ்ய உபநிஷதம்

பொன்மயமான மூடிக்குள் மறைந்துள்ளது – சத்தியத்தின் முகம். பேணி வளர்ப்போனே, சத்திய இயல்பினர் காண அதைத் திறந்திடுக… அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் – அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்… கடவுள் – உலகம், துறவு – இன்பம், செயல் தரும் பந்தம் – செயலின்மை தரும் முக்தி, ஒன்று – பல, அறிவு – அறியாமை, இவ்வுலகம் – அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை… காந்தி பரவசத்துடன் எழுதுகிறார் – எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இந்த ஒரு சுலோகம் இந்துக்களின் நினைவில் எஞ்சியிருந்தால் போதும்…

View More ஈசாவாஸ்ய உபநிஷதம்

உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

போய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்… வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட… வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்… வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்..

View More உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

அறியும் அறிவே அறிவு – 1

“IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?”… ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே… எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது?…

View More அறியும் அறிவே அறிவு – 1

அருணையின் கருணை

ஒரு சாதாரணமான இரும்புக் குண்டு காந்த சக்தியுடைய இரும்புக் குண்டைச் சுற்றி வந்தால் அச்சாதாரண இரும்புக் குண்டு காந்தக் குண்டாக மாறுவதுபோல், சாதாரண மனம் (அதாவது சக்தி) சிவமாகிய திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் முடிவில் மனம் சிவத்தில் கலந்து சிவமேயாகும்… பக்தியுடன் ஒருமைப்பட்ட மனதுடனும், இறைவனிடத்தில் நம் தேவைகளைப் பற்றி ஏதும் விண்ணப்பிக்காமல் கிரி வலம் செய்தோமானால் நம் தூல வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் தேவையான பொருளும், அருளும் நம் பக்குவத்திற்கு ஏற்ப கொடுத்தருளுவார்.

View More அருணையின் கருணை

ஜோதியில் கலந்தோர்

கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் மின்னல் போன்ற ஒரு சுடர் தென் திசையிலிருந்து சிவ பெருமான் வீற்று இருக்கும் திசை நோக்கிச் செல்கிறது. அதைக் கண்டதும் முனிவர் கை கூப்பித் தொழுது நிற்கிறார்… இப்படியான நிகழ்ச்சிகள், மனிதனாகப் பிறந்தாலும் ஒருவன் உயர் நிலைக்குச் சென்று உண்மை நிலையை உணரும்போது இறைவனுடன் ஒளியாக ஐக்கியம் ஆகிறான் என்பதைக் காட்டுகிறது.

View More ஜோதியில் கலந்தோர்