கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்

நம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க  சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா – மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் நம் கலைஞர்களும் பூசாரிகளும் அதற்கு துணை போவது கொடுமை. அதைத் தட்டிக் கேட்டால், சோடா விற்கத்தான் பாடினேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. சோடா விற்கலாம் தான். ஆனால் சாராய குழுமத்திற்காக செய்தால், சாராய விற்பனை என்றே கொள்ளப்படும்…

View More கிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்

எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை

தமிழ் இசை மூவரில் ஒருவர் மாரிமுத்தா பிள்ளை. தில்லை ஈசனிடமே பேரன்பு பூண்ட அடியார். அவனைத் தன் ஆண்டானாகவே கொண்டவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தான் அடியானாகிப் பாடுகிறார். ஆயினும், தமது அன்பின் உரிமையினால் தில்லை ஈசனை இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல்களே அனேகம் ஆகும்… “சாதியும் தாயும் தந்தையும் இல்லார் தனியர் என்றேனோ, பெண்ணால் – பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட புலையர் என்றேனோ, சாதி – பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில் பெண்கொண்டீர் என்றேனோ”… இவரது பாடல்களில், ‘காலைத் தூக்கி’, ‘ஏதுக்கித்தனை மோடி,’ எனும் பதம் முதலிய சில இன்றும் பரதநாட்டியத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன…

View More எப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை

எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்

இசையில் ஒன்றி, அதன் ஊடாக சேவடி தூக்கி ஆடுகின்ற ஐயனின் ஆனந்த நடனத்தையும் அம்மை சிவகாமி அதை ஒயிலாக நின்று வியந்து ரசிப்பதையும் நமது மனக்கண்ணில் கண்டு புளகாங்கிதம் எய்த வைக்கும் பாடல்! வளமை பொருந்திய சொற்களின் அழகு உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. ஆடவல்லான் மீது இவ்வளவு அழகிய ஒரு பாடலா? யார் இயற்றியது எனத் தேட வைத்த பொருள் நயம்… சீர்காழி முத்துத் தாண்டவர் இசைக் கருவிகள் செய்யும் இசை வேளாளர் பரம்பரையில் வந்தவர். அன்னை பார்வதியின் அருளினால் நோயிலிருந்து குணமாகி, அவள் ஆணைப்படி சிதம்பரம் சென்றார். அங்கு தில்லை அம்பலத்தில் நாளின் தொடக்கத்தில் கேட்கும் சொற்களைக் கொண்டு நாள்தோறும் நடராஜன் மீது ஒரு பாடல் இயற்றலானார்… முதன்முதலாகப் பாடல்களை பல்லவி, அனுபல்லவி, சரணம் என மூன்று பகுதிகளாகப் பாடும் முறையை இவர்தான் நடைமுறைப் படுத்தினார் எனக் கூறப்படுகிறது…

View More எப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்

பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை

கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமான புலம்பல் என்பது, இக்கலையின் மீதான இளைய தலைமுறையினரின் அக்கரையின்மையும், பொது மக்களின் ஆர்வமின்மையுமே… இதற்கு பதில் என்னவாகத் தான் இருக்கமுடியும்? நாள்தோறும் முன்னேறிவரும் டெக்னாலஜியை பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல இசையை அவர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மனமிருந்தால். உண்மையான அக்கரையும், முனைப்பும் இருந்தால் சாதித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. இதற்கான ஒற்றை பதிலாக இருப்பது “பரிவாதினி”. கர்நாடக இசைக்கு கிடைத்த ஒரு மாபெரும் கொடை. இதன் பின்னணீயில் இருப்பவர்களின் இசை அறிவும், ஆர்வமும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று….பெரும்பாலான அரசியலியக்க செயல்பாட்டாளர்கள் கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களது என்றும் தமிழிசை என்பது வேறேதோவென்றும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டிருக்கிறேன். நல்ல விஷயங்களை எல்லாமே பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் மனப்பான்மைக்கு சற்றும் எதிரானதல்ல இது. பரிவாதினி இவ்வரசியல்களுக்கு அப்பாற்பட்டது என்று நிறுவியிருக்கிறார்கள்….

View More பரிவாதினி – கர்நாடக இசைப் பரவலில் புதிய தாரகை

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

விழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி! இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை.

View More தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

ரீதிகெளளை

ரீதிகெளளை ‘கண்கள் இரண்டால்’ பாடலாக ஊரெங்கும் சமீபத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கேட்டு ரசிக்கும் பெரும்பாலானோருக்கு அது ரீதிகெளளை ராகத்தில் அமைந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் அப்பாடலை ரசிக்க அந்த விஷயம் தெரிந்திருக்கத் தேவையுமில்லை என்பது உண்மை!

View More ரீதிகெளளை

நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்

வயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்’ என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன்.

இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜன். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான ‘வா ராஜா வா’வில் குன்னக்குடி வைத்தியநாதனை வெற்றிகரமான திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தினார். அதில் வரும் ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா’ போன்ற பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து ஏ.பி.என். அவர்கள் தயாரித்த ‘கண்காட்சி’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மேல்நாட்டு மருமகள்’ போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து மக்களிடையே ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் அறியப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன்…

View More நினைவஞ்சலி: குன்னக்குடி வைத்தியநாதன்