வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன.....விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம். [மேலும்..»]