கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…

View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)

ஆன்மாவுக்கு மரணமில்லை என்பது பாரத நம்பிக்கை. கருணாநிதியின் ஆன்மா தனது பாத்திரத்தில் 94 ஆண்டுகள் மனிதக் காலக் கணக்கில் வாழ்ந்து மறைந்துவிட்டது. அவ்வாழ்க்கையில் அவர் செய்த நன்மை- தீமைகளை எடையிட்டு அதற்கேற்ப அவரை விமர்சிப்பதே தகுதிசார் மதிப்பு. எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவரை வாழ்த்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில் எனது குரல் அபஸ்வரமாகத் தோன்றலாம். ஆனால் இது காலத்தின் தேவை. அண்ணாதுரைக்கு எதிராக அவரது இரங்கல் கூட்டத்திலேயே கடும் மதிப்பீட்டை முன்வைத்த ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகள் இன்றில்லை… அவரை அதிமானுடனாக உருவகிப்பதிலோ, சமூக நீதி காத்த தளகர்த்தராகப் புகழ்வதிலோ, மகத்தான தலைவராக முன்னிறுத்துவதிலோ எனக்கு சற்றும் உடன்பாடில்லை…

View More அஞ்சலி: மு.கருணாநிதி (1924-2018)

காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.

View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

கூட்டுச் சதியாளர், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகளுடன், கடந்த மே 20 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழிக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டு… வெளியில் வந்துவிட்டார். திமுகவுடன் பாந்தமாக இருந்த ஒரு பத்திரிகை இப்போது அதிமுக பத்திரிகையாகவே மாறிவிட்டது…. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பது பழமொழி. எனினும் தந்தை சாப்பிட்ட உப்புக்கு மகள் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறதே என்பது வேதனை அளிக்கவே செய்கிறது…

View More அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…

…தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்..

View More இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…

தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?

View More தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்

தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?

பணி நியமன ஆணை வழங்கப்படும் போதுதான் உளவுத் துறைக்குத் தெரிந்தது, தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 42 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த 42 பேருக்கும் ஆளும்கட்சியின் இஸ்லாமியப் புள்ளி பரிந்துறை செய்ததும்… என் மீதான வழக்கில் (த.கிருஷ்ணன் கொலை வழக்கு) நான் விடுதலையாவதற்கு அமைச்சர் பெரியசாமி செய்த உதவிகளை மறக்க முடியாது என்கிறார் அழகிரி… ஆளும்கட்சியின் நெருக்கடியின் காரணமாக, சில தினங்களுக்குள், பிடிப்பட்டது ரேஷன் அரிசி கிடையாது என அந்தர்பல்டி அடித்தார் மாவட்ட ஆட்சியாளர்.

View More தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

விழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி! இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை.

View More தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு

போகப் போகத் தெரியும் – 28

சுயமரியாதைத் திருமணம் ஆரம்பமான கதை இதுதான். ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்களைக் கட்டிவைத்ததுதான் பகுத்தறிவுப் பாரம்பரியத்தின் தொடக்கம்.

View More போகப் போகத் தெரியும் – 28

கிறிஸ்துவ – திராவிட மாயவலை

சென்னை சங்கமம் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜகத் காஸ்பர் இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்….

View More கிறிஸ்துவ – திராவிட மாயவலை