சேக்கிழாரின் செழுந்தமிழ்

கட்டுரையாசிரியர்கள்:கம்பபாத சேகரன்  (சங்கரன்)  & மீனாட்சி பாலகணேஷ் இலக்கியம் என்பது மாந்தர்களை நெறிப்படுத்தி…

View More சேக்கிழாரின் செழுந்தமிழ்

கம்பர் உருவப்படங்கள்

காலத்தால் முற்பட்ட, வரலாற்று ரீதியான, ஆதாரபூர்வமான கம்பர் உருவம் என்றால் அது தேரெழுந்தூர் கோயில் சிற்பம் தான். ஆனால், கம்பன் கழகங்கள் இந்த உருவத்தை ஏதோ காரணத்தால் வேண்டுமென்றே பயன்படுத்தாமல், தாங்களாக ஒரு உருவத்தைக் கற்பித்து, அந்தப் படங்களையே பயன்படுத்தி வருகிறார்கள்..

View More கம்பர் உருவப்படங்கள்

கம்பனும் காளிதாசனும்

யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! (பெயரிலி, மோதிரவிரல் என்று இரு பொருள் இச்சொல்லுக்கு உண்டு). காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.. வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் காளிதாசன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்…

View More கம்பனும் காளிதாசனும்

கம்பராமாயணம் – 66 : பகுதி 3

மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர். அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?…. இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும், வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, அவனுடைய மார்பில் நுழைந்து, உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய புனிதம் நிறைந்த அம்பு…

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 3

கம்பராமாயணம் – 66 : பகுதி 2

இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின…. எந்தக் குலத்தில் பிறந்தவராயினும், அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும். (வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும், பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்….

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 2

கம்பராமாயணம் – 66 : பகுதி 1

இந்த 66 பாடல்களின் தொகுப்பு, கதைப் போக்கின் தொடர்ச்சியையும், முக்கியமான கட்டங்களையும் பாடல்கள் தரும் உணர்வெழுச்சியையும் கருத்தில் கொண்டு, இராமகாதையின் அமுதச் சுவையை முதல்கட்டமாக அறிமுகப் படுத்தும் நோக்கில் செய்யப் பட்டுள்ளது… “சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர். இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை. மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை…”

View More கம்பராமாயணம் – 66 : பகுதி 1

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்….. “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்…..

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

கம்பனும் இலங்கையும்

கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…

View More கம்பனும் இலங்கையும்