Posts Tagged ‘ கம்பராமாயணம் ’

இலக்கியம், கம்பராமாயணம்

படிவங்கள் எப்படியோ?

January 3, 2012
-
படிவங்கள் எப்படியோ?

வெளி முழுவதையும் அந்த ஒற்றைப் பாதம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ என்பது போல ஒரு தோற்றம்... இராமவதார காவியத்தில், விராதனுக்கு சாப விமோசனம் மட்டுமல்ல, இராம ஸ்பரிசத்தால் மேலான நல்லறிவும் உண்டாயிற்று என்று கம்பன் எழுதுகிறான்... ஒரு விலங்கினால் மற்றொரு விலங்கிற்கு விளைந்த துயர் நீக்க வந்து, இரு விலங்குகளுக்கும் முக்தியளித்தாய்... "பார்த்தா, மூன்று உலகங்களிலும் எனக்கு யாதொரு கடமையும் இல்லை. அடையாத ஒன்றை இனி அடைந்தாக வேண்டும் என்பதும் இல்லை. ஆயினும், இடையறாது கர்மத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்..."

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது... கைகேயி இராமனை, 'உங்கள் மகன்' என்றோ, 'கோசலை மகன்' என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல 'சீதை கேள்வன்' என்று குறிப்பிடுகிறாள்... இராமன், 'என் தாய்' என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், 'என் தெய்வம்' என்கிறான்... "இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்," என்கிறாள் சீதை... கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

மேலும் »

ஆன்மிகம், தொடர், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய்

மேலும் »

ஆன்மிகம், தொடர், வைணவம்

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1

February 15, 2011
-
பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1

பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை

மேலும் »

அனுபவம், இலக்கியம், கவிதை

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

August 31, 2010
-
ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது... விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்... சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது... இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது...

மேலும் »

ராமாயணம்

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

அன்னையெனப் போற்றப்பட்ட அரக்கி

தாயின் உயர்வைச் சொல்லும் முதுமொழிகள் ஏராளம். ஏனென்றால் அன்பே உருவானவள் தாய். அரக்க குலத்தில் பிறந்த பெண் ஒருத்தி, அவள் காட்டும் அன்பின் காரணமாகத் தாயினும் இனியவளாகப் புகழப்படுகிறாள். ஆம், திரிசடையைத்தான் கம்பன் இப்படி அறிமுகம் செய்கிறான். அரக்க மகளான திரிசடையை ஒருமுறை அல்ல, மூன்றுமுறை அன்னை, அன்னை, அன்னை என்று விளிக்கிறாள். என்ன காரணம்?...

மேலும் »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகின்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல்... (Verses 16-20)

மேலும் »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

கம்பராமாயணம் – 18 (Kamba Ramayanam – 18)

அந்த மதிலில், (தொலைதூரத்துக்கு அம்புகளை எறியக் கூடிய மிகப் பெரிய) விற்கள் பொருத்தப்பட்டிருந்தன. கூர்மை மிகுந்த, கொல்லக் கூடிய வாளையும், கோடரிகளையும், இரும்புத் தடிகளையும், சக்கரங்களையும், எறியீட்டிகளையும், உலக்கைகளையும் வீசக்கூடிய கணக்கில் அடங்காத எந்திரப் பொறிகள் அமைக்கப்பட்டிருந்தன... (Verse 11-15)

மேலும் »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது! (நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City)

மேலும் »

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி - கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது... (பாடல்கள் 56-61 End of Canto of Country)

மேலும் »