Tag Archive: கம்ப ராமாயணம்
You are browsing the tag archive for கம்ப ராமாயணம்.
You are browsing the tag archive for கம்ப ராமாயணம்.
‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10)