Posts Tagged ‘ கர்நாடகம் ’

சமூகசேவை, சமூகம், பொது

அட்சய பாத்திரம்

August 18, 2011
-
அட்சய பாத்திரம்

குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.

மேலும் »

ஆன்மிகம், சமூகம், வழிகாட்டிகள்

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

November 25, 2010
-
கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ? தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?... பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள்...

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், வழிகாட்டிகள்

வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

August 12, 2009
-
வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: வள்ளுவர், சர்வக்ஞர்

சர்வக்ஞன் என்பவன் கர்வத்தினாலா அப்படி ஆனான்? எல்லாரிடமும் ஒவ்வொரு சொல் கற்று, வித்தையின் பர்வதமாகவே ஆனவல்லவோ சர்வக்ஞன்! 1500 ஆண்டுக் கால இடைவெளியில் வாழ்ந்த இருபெரும் புலவர்கள், ஞானிகள் இன்றும் இந்த தேசத்தை, இதன் மக்களை இணைக்கிறார்கள். தர்மம் எப்போதும் மக்களை இணைக்கிறது, வாழவைக்கிறது. அதர்மம் அடித்துக் கொள்ளச் சொல்லி, அழிக்கிறது.

மேலும் »