ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள் - மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்...: தினமணி கட்டுரை
பெரியசாமி தூரன்: தமிழகத்தின் உண்மையான பெரியார்
By B.R.ஹரன்
Posted in இலக்கியம், வழிகாட்டிகள் on 5 October 2009
Stats: பார்வை: 843 and 11 Comments

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது… பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்?

இசைக்கூறுகள் - 6 : குறியீட்டு முறையின் வரலாறு
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 6 September 2009
Stats: பார்வை: 603 and 1 Comment

1874களில் ரவீந்தரநாத் தாகூர் Hindoo Patriot என்ற இதழில் - “இசை முறைகள் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் தனிப்பட்ட குறியீட்டு முறை இருக்கும். அவை விஞ்ஞான முறைப்படி உள்ளதா, மற்ற முறைகளை விட மேன்பட்டதா என்ற கேள்விகள் தேவையில்லாதவை.. எல்லாவிதங்களிலும் ஆங்கில யுத்திகளைப் பயன்படுத்தும் நாம், இந்திய இசைக்கு எங்கள் முறையே சிறந்தது என எண்ணுகிறோம்” - என குறியீட்டு விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இசைக்கூறுகள் - 4 : மேளகர்த்தா ராகங்கள்
By ரா.கிரிதரன்
Posted in இசை on 2 August 2009
Stats: பார்வை: 350 and 3 Comments

எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன. அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த ராகங்களாகும் …

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இசை, இலக்கியம், கலைகள், சைவம் on 22 July 2009
Stats: பார்வை: 576 and 3 Comments

சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்…. யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் …

இசைக்கூறுகள் - 3 : ரஸபாவம் - ராகம்
By ரா.கிரிதரன்
Posted in இசை on 20 July 2009
Stats: பார்வை: 418 and 4 Comments

ஆலாபனை மிக முக்கியமானதொரு பகுதி. இந்தப் பகுதியில் பாடகர் தான் பாட இருக்கும் ராகத்தின் வளைவு நெளிவுகளில் வளம் வருவார். பல சமயங்களில் அதிகமான நேரம் ஆலாபனை செய்ய செலவாகும். ஒரு பாடலுக்கு நேர்த்தி சேர்ப்பது ஆலாபனையே …

அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்
By ஜடாயு
Posted in இசை on 18 July 2009
Stats: பார்வை: 328 and 15 Comments

… பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை….

இசைக்கூறுகள் - 2 : பாகம் 01- தாளம் மற்றும் ஸ்வரம்
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள், பொது on 7 July 2009
Stats: பார்வை: 315 and 3 Comments

ராணுவ அணிவகுப்புகளில் இருக்கும் ஒற்றுமை தாள அடிப்படையிலேயே அமைந்திருக்கும்… இதில் நாம் இருவகை இயக்கங்களை ஒரே நேரத்தில் செய்கிறோம். அப்படி செய்யும்போதே ஒரு ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் நிகழ்கின்றது. இதைப் போன்று தொடந்து செய்து வந்தால் இரு பகுதிகளாக மட்டுமே பிரிக்க முடியும். ஒரே போன்ற இசை அமைப்பு மட்டுமே உருவாகியிருக்கும்.

இசைக்கூறுகள் - 1 : அறிமுகம்
By ரா.கிரிதரன்
Posted in இசை, கலைகள் on 24 June 2009
Stats: பார்வை: 298 and 2 Comments

இத்தொடரில் தமிழிசைக்கான கேள்விகளை பற்றி விவாதிக்கும் அதே வேளையில், எந்த ஒரு நிலையிலிருந்தும் மூன்றாம் ரக இசை அனுபவத்தை அடைவதே நம் நோக்கமாகும்.

கடல் கடந்த முத்துஸ்வாமி தீக்ஷதர்
By ராமஸ்வாமி சந்திரசேகரன்
Posted in கலைகள் on 20 December 2008
Stats: பார்வை: 494 and 4 Comments

ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதி மிக விசேஷம் வாய்ந்தது. இந்த அயல்நாட்டுக் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர். எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண். என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, அட்சரசுத்தம்!…

இசையில் தொடங்குதம்மா
By சேதுபதி அருணாசலம்
Posted in கலைகள் on 26 August 2008
Stats: பார்வை: 2,066 and 12 Comments

.. இந்த இரண்டு துருவங்களுக்கும் நடுவே, இளையராஜாவின் இசையைப் பற்றிய் உண்மையான மதிப்பீடு பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதேயில்லை… இப்போது பெரும்பாலும் கர்நாடக இசைப்பாடல்கள் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நாம் வேண்டாம் என்று விலகி ஓடினாலும், ஒரு அழகான ஹம்ஸநாதத்தை நமக்குத் தந்திருக்கிறார் இளையராஜா.



"));