பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

ஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள்? இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்…. இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது வருமானவரித்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்….

View More பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

பயணம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். சிலர் முதல் வாரத்திற்குப் பதிலாக இரண்டாவது மூன்றாவது வாரத்தில் இதைச் செய்திருக்கலாம் என்றுசொன்னார்களே தவிர எவரும் கண்டிக்கவோ மோடியை எதிர்க்கவோ இல்லை. இதை ஒரு மாபெரும் துணிவான புரட்சிகரமான நடவடிக்கை என்றே ஏகோபித்துப் பாராட்டினார்கள். வங்கிகளில் காத்திருத்தலை ஒரு தேச தேச சேவையாகவே பலரும் எடுத்துக் கொண்டார்கள்… நிச்சயமாகப் பல எளிமையான வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருப்பார்கள். சிலர் அவசரத்தேவைகளுக்காகத் தவித்திருப்பார்கள். இருந்தாலும் இங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியப் பட்டவர்கள் அல்லர். கூடுமானவரை பரஸ்பர புரிதலுடன் அனுசரித்துச்செல்கிறார்கள். எவரும் எவரையும் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாக அனுமதிப்பதில்லை. பரஸ்பர உதவிகளின் மூலமாகக் கடந்து செல்கிறார்கள்… இந்த மாபெரும் பணியைக் கூடுமான வரையிலும் மக்களுக்கு இடர்பாடின்றி செயல் படுத்த உதவிக் கொண்டிருக்கும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும், அரசுப் பணியினருக்கும் நமதுபாராட்டுக்கள்….

View More கருப்புப் பணமும் கள்ள பத்திரிகைகளும்

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…

View More பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்