கம்பனின் சித்திரகூடம்

பெண் யானை இரைத்து இரைத்து மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இளமையான யானை தான், ஆனால் உண்டாகி இருக்கிறது. களைத்துப் போய் உட்கார்ந்து விட்டது. கூட வரும் ஆண்யானை நறுமணம் கமழும் செந்தேனை துதிக்கையால் தன் துணைக்கு ஊட்டி விடுகிறது… கம்பர் சித்தரித்துக் காட்டும் அடர் கானகத்தில் ஒருவிதமான ஒத்திசைவும் ஒழுங்கும் உள்ளது. கொடிய கானகத்திலும் இராமன் சீதைக்குக் காட்டும் காட்சிகளில் எல்லாம் அன்பின் ததும்பலே வெளிப்படுகிறது. .. குடிசை கட்டி முடித்து நிற்கும் குன்று போர்ந்த உயர்ந்த அந்தத் தோள்களைப் பார்க்கிறான் இராமன். “இது போல எப்போதடா கற்றுக் கொண்டாய் லட்சுமணா?”..

View More கம்பனின் சித்திரகூடம்

உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

போய்விட்டனர் முன்னாள்களில் உஷையின் உதயம் கண்ட மானிடர்.. நாம், இன்று வாழும் நாம், அவளது நல்லொளி காண்கிறோம்… வரும் நாள்களில் அவளைக் காண நமது பின்னோர் வருகிறார்கள்.. மகாசக்தியின் பேரியல்பை பெண்மையின் சோதிமுகமாக, புன்முறுவலாக, பெண்மையின் தீண்டலாக, ஸ்பரிசமாக, பெண்ணின் பால்பொழியும் கருணையாகக் கண்டானே ஆதி வேத ரிஷி! அவன் பெரும் ஞானி மட்டுமல்ல, பெருங்கவிஞனும் கூட… வசன கவிதைகளில் பாரதி வேத இலக்கிய உருவகங்களை அற்புதமாக எடுத்தாள்கிறார்… வேத கவிதை உருவகத்தை முழுமையாக உள்வாங்கி முற்றிலும் புதுப் புதுப் படிம வெளிகளுக்கு ஜெயமோகன் எடுத்துச் செல்கிறார்..

View More உஷை: வைகறைப் பெண்ணின் வனப்புகள்

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு… இச் சின்ன சின்ன பறவைகளை குழந்தைகளாக, அழகு கொழிக்கும் ஜீவ சிற்பங்களாக, கவிதைகளாகப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்… கொண்டலாத்தி புத்தகத்தின் பின் இத்தனை சமாசாரங்கள் இருந்திருக்கின்றன. நம் கைகளில் இருப்பது புகைப்படம் எடுக்கப்பட்ட கவிதைகளும், ஆசை எழுதிய கவிதைகளும்…. வானத்தை வானத்தைக் கலைத்துப் பறக்கும் கொக்குக் கூட்டம்… அவை கடக்கும் போதெல்லாம்…

View More பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்