புதிய பொற்காலத்தை நோக்கி – 15

மேற்கத்திய உலகம் தயாரித்த ஏ.ஸி. 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறதென்றால் இந்த இந்திய ஏஸி பத்தாயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. ஒரு கிராமத்து நபர் கண்டுபிடித்த கருவி இது. எந்த பல்கலைக்கழக பேராசிரியரும் விஞ்ஞானியும் இதைச் செய்யவில்லை… சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்தாகவேண்டியது காலத்தின் கட்டாயம். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்ற்ச் சூழல் மாசை அது கணிசமாகக் குறைக்கவும் செய்யும். இந்த எண்ணம் நமக்கு இதுவரை இருந்திருக்கவில்லை. இதனால் நமது சாலைகளில் சைக்கிள்களுக்கென்று தனி லேன் அமைக்க வழியில்லை…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 15

என்னுள்ளில் மார்கழி

மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும்குழு, நேராக தார் ரோடின் வழியாகவே ஊர் எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து.. முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்… ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும்…

View More என்னுள்ளில் மார்கழி

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே – என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். காரணம்? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்…..

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2

”பின்தங்கியவர்கள் நகரத்திலும் உண்டு, கிராமத்திலும் உண்டு. எனவே நகரம் கிராமம் என்று பிரித்து கிராமத்தவருக்கு தனி ஒதுக்கீடு கொடுப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் நீதி அரசர்கள். இந்த தீர்ப்பை தொடர்ந்து தான் தமிழக அரசு ஒரே அடியாக நுழைவு தேர்வை ரத்து செய்யும் வரலாற்று முடிவை எடுக்கிறது. அதன் விளைவைத்தான் இன்று கண்டுகொண்டு இருக்கிறோம்… பெங்களூரில் கர்நாடாகாவின் பல்வேறு ஜாதிகளுக்கு சொந்தமான மாணவர் /மாணவியர் விடுதிகள் உள்ளன. மூவேந்தர்களும் தங்கள் ஜாதி என்று நிரூபிக்க கம்பு சுற்றும் நண்பர்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.உங்கள் ஜாதியை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்தாய்விற்காகவோ, எதாவது ஆய்வரங்கில் கலந்து கொள்ளவோ சென்னைக்கு வந்தால், அவர் தங்குவதற்கு, சரி விடுங்கள், ஓய்வெடுப்பதற்கு 100 சதுரஅடி இடத்தையாவது தயார் செய்து வைத்திருக்கிறீர்களா?…

View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 2