தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.

View More தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

கேரளா அரசின் தலைமைக் கொறடாவான பி.சி.ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம், ”கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை” என்று கூறி இருக்கிறார். ‘பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?” என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்

View More கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடி வரும் சுப்பிரமணியன் சுவாமி பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் மதச்சார்பற்ற, இடது சாரிகள் என்பது ஒரு முரண்நகை. அண்மையில் டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். இது இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; விளைவாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவர் நடத்தி வந்த வகுப்புகளை நிறுத்தியது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!

View More சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

பயணம்: திரைப்பார்வை

திருப்பதி விமானநிலையத்தில் ஓடுவழி நடுவில் இருக்கும் மூடிய விமானத்துக்குள்ளாக ஒரு மாதா கோயில் மணியோசை கேட்பதாக படத்தில் காட்டுகிறார்கள்… பாதிரியார் விமானத்துக்குள்ளே பைபிள் படிக்க அனுமதி பெற்று, அதை உரக்க எல்லோருக்குமாகப் படிப்பதில் இயல்பாகத் தொடங்கும் கிருத்துவக் காட்சிகள், இறந்த பயணிக்காக பாதிரியார் ஜபிக்கும்போது இயல்பை இழக்க ஆரம்பிக்கிறது.

View More பயணம்: திரைப்பார்வை

மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?

அரசின் சட்டத்தையும் மீறி குமரி முழுதும் முளைத்த சர்ச் தற்போது எதற்காக வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டதோ, எந்த மதக்கலவரத்தால் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைத் திரும்பிப் பார்த்ததோ அந்த மண்டைகாட்டு பகவதி அம்மன் கோவிலின் அருகிலேயே புதிதாக சர்ச் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.

View More மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?

இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.

View More இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது… கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர்… இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்…

View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

(மூலம்: ரிச்சர்ட் ஷேனிக்) இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து’வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்… அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு… மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்…

View More “முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1