தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.

View More தேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்

இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்

நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியாவிற்கு என ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட், செக்யூலர் என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்டன. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத திருமதி இந்திரா காந்தி, 1975-ல் நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தி ஒரு வருடம் கழித்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது… பல ஷரத்துக்களில் இந்திரா காந்தி அரசுக்கு சர்வாதிகார உரிமைகள் அளிக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை மறைப்பதற்காகவே, அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் இரண்டு வார்த்தைகளை இணைத்தது என்பதை மறக்க கூடாது. ஏன் இதை நிரந்தரமாகவே நீக்க வேண்டும் என்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன. செக்யுலர் அரசியல் கட்சிகள் பதவிக்கு வரும் போது சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல், வாக்கு வங்கி அரசியல் நடத்துக்கிறது….

View More இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம். [….] கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

View More முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்