Posts Tagged ‘ குடும்பம் ’

சமூகம், பொது

முதுமை – சில சிந்தனைகள்

October 1, 2011
-
முதுமை – சில சிந்தனைகள்

இந்தியாவில் பிள்ளைகளின் படிப்புச் சுமை, குடும்பச் சுமை, வயதான பெற்றோர்களின் பராமரிப்பு என்று அதிலேயே ஈட்டிய பொருள் அனைத்தும் செலவாகி, வயதான காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலையில் இருந்து விடுகின்றனர். வயது காலத்தில் பணம் தனக்கென்று காசு சேர்த்துக் கொள்ளாமல் இவர்கள் இருந்தது கூட, வயதான காலத்தில் பிள்ளைகள் தம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் என்று தோன்றுகிறது. ஆனால் முன்னெப்போதையும் விட மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் இந்த மாதிரியான திட்டமிடல் நிறைவேறாமல் போவதாகவே தோன்றுகிறது

மேலும் »

சினிமா

தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

தெய்வத் திருமகள் – திரைப்பார்வை

எதிர்மறை செய்திகளும் எதிர்மறை எண்ணங்களும் எதிர்மறை மனிதர்களும் மிக மிகக் குறைவாக இருக்கும் ஒரு கதைக்களம், நிறைவான ஒரு நீண்ட படத்தைத் தருவது இப்படத்தின் சிறப்பம்சம்... நமது கலாச்சாரத்தின் நல்லடையாளமாகத் திகழும் மகளிர் இடும் நெற்றித் திலகம் இப்படத்தில் வரும் மூன்று முக்கிய பெண் பாத்திரங்களாலும் தெளிவாகத் துலங்கும்படி உடையலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது...

மேலும் »

சமூகம், நிகழ்வுகள், வரலாறு, வீடியோ

கள்ளக் காதல்

October 7, 2010
-
கள்ளக் காதல்

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், பொது

ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா?... சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது....

மேலும் »

அனுபவம், ஆன்மிகம், வழிகாட்டிகள்

தியானமே நம்மை உய்விக்கும்

தியானமே நம்மை உய்விக்கும்

தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே "தியானம்" எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது. வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள்...

மேலும் »

ஆன்மிகம், இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள்

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்.... இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது... இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே...

மேலும் »

இந்து மத மேன்மை

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

மேலும் »

சமூகம், பொது, மகளிர்

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்...

மேலும் »

மகளிர்

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது... குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள்.

மேலும் »