மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

தனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை….

View More மோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு

கூகுள் கொண்ட கோபம்

அரசின் சைபர் ஒற்று வேலைகள் இதில் 4-வது விஷயத்தில் கைவைப்பதாக கூகுள் நினைத்தால் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அதை வைத்துத்தான் மற்ற மூன்று விஷயங்களும் கட்டியெழுப்பப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அந்த ஆதார உளியே களவாடப்பட்டால் கடையை மூட வேண்டியதுதான் ஆக, புதிய மாபெரும் சந்தை என்பதை விட, வாழ்வா சாவா பிரச்சனையாகவே இவ்வகை தாக்குதல்களையும் வேவு வேலைகளையும் கூகுள் போன்ற நிறுவனங்கள் பார்க்கும். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது ஒரு வியாபார அவசியமே ஒழிய மனித உரிமைமேல் வந்த திடீர் ஆர்வமெல்லாம் இல்லை.

View More கூகுள் கொண்ட கோபம்