ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து

டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட் மிகவும் ஆபத்தான அறிஞர். இடதுசாரிகள் அவர்மீது வன்மத்தைப் பொழிகின்றர் எனில், சில இந்து ஆசாரவாதிகளுக்கும், சமூகவளைதளக் காவிகளுக்கும் கூட அவரை ஒப்புகொள்வதில் சங்கடம் உள்ளது இந்த சலசலப்புகளைத் தாண்டி, அவரது வரலாற்று நூல்கள் காலத்தை வென்று நிற்கும்.. மனுஸ்ம்ரிதி ஒரு “ஜாதிய அறிக்கை” கிடையாது. மனுவின் பார்வை மிகவும் விரிவானது, அதே சமயம் முரண்கள் நிறைந்தது. வர்ணக்கலப்பு விஷயத்தில் அறநெறிப் பார்வையும் உள்ளது.. குதிரையின் இருப்பு ஹரப்பா நாகரீகத்தில் இன்று தொல்லியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைவைத்து இந்துத்துவ சார்புள்ள வரலாற்று அறிஞர்கள் மீது மோசமான, கீழ்த்தரமான அவமதிப்புகள் நிகழ்ந்தன… வள்ளுவர்கள் பிராமணர்கள் போலவே கோவிலில் பணியாற்றினார்கள் என்று தெரிகிறது..

View More ஆரியர் படையெடுப்பின் சுவடுகள் இன்னமும் இல்லை: கோயன்ராட் எல்ஸ்ட் நூலை முன்வைத்து

புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி

மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி… ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது… “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை (OIT). ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை…

View More புதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா? கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி

கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

இந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது… போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும்… மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்…

View More கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

ஹிந்து என்னும் சொல்

பொதுவாக பலர் நினைப்பது போல, ஹிந்துக்கள் தங்களை “ஹிந்துக்களாக” உணரத் தொடங்கியது பிரிட்டிஷ் காலகட்டத்தில் தான் என்பது உண்மையல்ல….ஹரிஹரர், புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது…சுடலைமாடன் கொடையில் மாடன் கதை பாடுவார்கள் – ”ஆறு சாத்திரமும் ஆறு தத்துவமும் வேதம் அடங்கலுடனே அள்ளிவந்தானையா…” அதுதான் இந்து மெய்ஞான மரபு…

View More ஹிந்து என்னும் சொல்

அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்ம பூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பல தரப்பட்ட இந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர்… நமது அரசியலில், சமூகத்தில், ஏன் நமது உண்மையான தேசிய அடையாளம் என்ன என்ற உணர்விலேயே கூட அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது… ஏன் இந்தியாவில் இத்தனை இதயங்களில் அந்த உணர்வு எதிரொலிக்கிறது என்று புரிந்து கொள்ள முயலாத அறியாமையே, அதனை பாசிசம் என்று மொண்ணையாக வசைபாடுகிறது..

View More அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி

ஆரியப்படையெடுப்பு என்பது பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் ஒரு முக்கியமான அரசியல் கேள்வியாக ஆகியுள்ளது. ஏனெனில் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் தமது கோட்பாட்டின் அடித்தளமாகவே இந்த ஆரிய இனவாதத்தை முன்வைக்கின்றன. மேற்கத்திய பெரும் அகாடமிக் நிறுவனங்களில் பல இந்த கோட்பாட்டை வாழவைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இக்கோட்பாட்டின் முக்கிய மேற்கத்திய விமர்சகராக திகழ்பவர் டாக்டர்.எல்ஸ்ட். இவரது இந்நூல் குறித்து ஒரு அறிமுகமாக இக்கட்டுரையை தமிழ் ஹிந்து வெளியிடுகிறது.

View More நூல் அறிமுகம்: வரலாற்று ஆராய்ச்சி