மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்

விஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ ! “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்?… தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்பது இதில் அடங்கும்.. சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து – செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்…

View More மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது… பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? “அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல.. ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும்…

View More காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்… ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?… உண்மையில் வைரமுத்துவின் இத்தகைய திரிபுவாதங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம் அல்ல. தமிழ் இலக்கியங்களின் மீதும் தமிழ்நாட்டின் இந்து சமய மரபுகளின் மீதும் திராவிட, இடதுசாரி இயக்கங்கள் கடந்த பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாகவே இவற்றைக் காண முடியும்….

View More ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

சில ஆழ்வார் பாடல்கள் – 2

இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்… அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு – இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்… உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்…

View More சில ஆழ்வார் பாடல்கள் – 2