Posted in அனுபவம், ஆன்மீகம் on 22 February 2010
Stats: பார்வை: 411 and 6 Comments
தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம்.
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 10 February 2010
Stats: பார்வை: 875 and 10 Comments
பக்தனுடைய சம்பந்தம் பெருமாளுடைய சம்பந்தத்தை விட பெருமை வாய்ந்தது. அதைப் பற்றி உயர்வாக பல ஆழ்வார் பாடல்களில் எடுத்துக்காட்ட முடியும். ஆனால் கூட்டம் இருக்கும்போது நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை, வீட்டில் படித்ததைக் கோயில் வரிசையில் மறந்துவிடுவதுடன், ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறோம்.
Posted in சமூகம், நிகழ்வுகள், பிறமதங்கள், பொது on 4 February 2010
Stats: பார்வை: 1,548 and 35 Comments
செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!
Posted in பண்டிகைகள் on 1 December 2009
Stats: பார்வை: 948 and 14 Comments
.. சென்னை பிருங்கி மலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது… புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ள பாதிரியார் தற்போது இந்த மலையிலும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன…
Posted in ஆன்மீகம், பொது on 25 November 2009
Stats: பார்வை: 1,273 and 14 Comments
பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள். சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது… ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.
Posted in அரசியல், பொது on 6 September 2009
Stats: பார்வை: 5,184 and 173 Comments
நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி … ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார் ரெட்டி .. 2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
Posted in அரசியல், ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், பண்டிகைகள் on 29 August 2009
Stats: பார்வை: 887 and 8 Comments
சென்னையை விட அதிக அளவில் முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் மும்பை, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களிலும், மற்ற மாநிலங்களிலும், (அதேபோல் மிகவும் விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படும் கல்கத்தா நகரிலும்) இந்த மாதிரிப் பிரச்சினைகள் இல்லாமல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்துக்கள் முழுச் சுதந்திரத்துடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட அந்தந்த மாநில அரசுகளும், காவல் துறையும் அனுமதித்து ஏற்பாடுகள் செய்யும்போது தமிழகத்தில் மட்டும் ஏன்….
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், தரவிறக்கம், பொது on 23 August 2009
Stats: பார்வை: 963 and 7 Comments
.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது… சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் - இங்கே …
Posted in இசை, சைவம், புத்தக விமர்சனம் on 20 August 2009
Stats: பார்வை: 486 and 1 Comment
பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …
Posted in அரசியல் on 16 August 2009
Stats: பார்வை: 755 and 8 Comments
அப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து…
Posted in கதைகள், சமூகம், வழிகாட்டிகள் on 5 August 2009
Stats: பார்வை: 455 and 7 Comments
… அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை ….
Posted in சமூகம், வழிகாட்டிகள் on 4 August 2009
Stats: பார்வை: 494 and 8 Comments
“வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்… எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது ….
Posted in புத்தக விமர்சனம், வரலாறு on 14 July 2009
Stats: பார்வை: 637 and 8 Comments
… எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது;ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம்.
Posted in இலக்கியம், கேள்வி-பதில், சமூகம், நிகழ்வுகள், பொது, வழிகாட்டிகள் on 13 July 2009
Stats: பார்வை: 1,582 and 39 Comments
பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.
Posted in ஆன்மீகம், பண்டிகைகள், வரலாறு on 2 July 2009
Stats: பார்வை: 629 and 18 Comments
கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக் காரர்கள், கப்பல்களில் ஏறித் தப்புவதற்கு முன் அதனை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர், அது முடியவில்லை… மன்னர்கள், துறவிகள், மடங்கள் மட்டுமல்லாது, எல்லா சமூகத்து மக்களும் இந்தக் கோவிலுடன் தொடர்பு கொண்டு முருகனை வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
Posted in புதிய இந்து on 15 June 2009
Stats: பார்வை: 215 and 1 Comment
..தனது கையால் இடித்த கோவிலை மீண்டும் தனது கையால் நிர்மாணித்தலே அமைதி பெறும் வழி என உணர்ந்தார் தாமஸ்.. உடனே கோயில் கட்டும் வேலையை நிறுத்தும்படி உள்ளூர் கிறித்தவ சபை உத்திரவிட்டது. ஜானுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கோவிலை கட்டியதும்தான் தங்களது குடும்ப நிம்மதி மீண்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால் கிறித்தவ சபையின் எதிர்ப்பையும் மீறி கோயிலை அமைத்து வழிபாடு செய்யத்தொடங்கினார்.
Posted in ஆன்மீகம் on 9 February 2009
Stats: பார்வை: 1,077 and 8 Comments
கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்… இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்…
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்