Payday loans Cialis online
payday loans Car insurance

Posts Tagged ‘ சமயம் ’

இந்து மத விளக்கங்கள், இலக்கியம்

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

அரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி?

மூதேவியும், ஸ்ரீ தேவியும் இந்து மதத் தெய்வங்கள். இந்தக் குறள் அவர்களைப் பற்றிச் சொல்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது - இன்றைய தமிழக முதல்வர் உட்பட... திருவள்ளுவரையும், திருக்குறளையும் புகழும் அப்பாடல்கள் சங்கப் புலவர்கள் எழுதியவை. அவர்களில் ஒருவராவது, திருக்குறள் மத சார்பற்றது என்றோ அல்லது சமண பௌத்த மதக் கருத்துக்களை உடையது என்றெல்லாமா கூறியிருக்கிறார்கள்? [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், இலக்கியம், கம்பராமாயணம்

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

January 28, 2010
-
கம்பன் கண்ட சிவராம தரிசனம்

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை... இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், சைவம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும். [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத மேன்மை, வழிகாட்டிகள்

ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? ... முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும். [மேலும்..»]

அரசியல், தொடர், வரலாறு

போகப் போகத் தெரியும் – 41

November 23, 2009
-
போகப் போகத் தெரியும் – 41

வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது... சித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. [மேலும்..»]

ஆன்மிகம், பிறமதங்கள்

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை

... இந்த ஓவியத்தில் உள்ளது போன்றதொரு காட்சியை அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வருணித்துவிட்டு இத்தகைய சாவு எனக்கு வாராமல் அருளவேண்டும் என முருகப்பெருமானிடம் வேண்டுகிறார். இயேசு கிறிஸ்துவின் இறுதி உயிர்களுக்கு இன்பம் விளைவிப்பதற்கு மாறாக அவலமே விளைத்ததால் அதனைத் தமிழ் இந்துக்கள் மதிக்காததில் வியப்பொன்றும் இல்லை. இது துர்மரணமே. [மேலும்..»]

சைவம்

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்... வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. [மேலும்..»]

சமூகம், வழிகாட்டிகள்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

"வள்ளலாரின் அடியார்கள்" என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்... எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது .... [மேலும்..»]

ஆன்மிகம், இலக்கியம், சைவம்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 4

பசு, பதி, பாசம் இம்மூன்றும் உள்பொருள்கள் எனப் பேசுவது சைவசித்தாந்தம்; சம்பந்தர் இந்தக் கலைச் சொற்களை வேதத்தினின்றும் எடுத்து ஆண்டார்... வைதிகர் என்னும் பெயர் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்குதல் பிற்காலத்தில் நேர்ந்து விட்டபிழை; வேதவழக்கை உடன்பட்ட அனைவரும் வைதிகரே. [மேலும்..»]

நிகழ்வுகள்

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம், கும்பகோணம்: நேரடிப் பதிவு

தமிழ்ச் சமயம் பற்றிய உண்மையான புரிதலை ஏற்படுத்துவதும், தற்போது தீவிரமாகப் பரப்பப் பட்டு வரும் திரிபுகள் பற்றி எடுத்துரைப்பதும் மிக முக்கியமானது; இதுவே இந்தக் கருத்தரங்கின் நோக்கம்... புனித தாமஸ் பற்றிய விவகாரம் தொடர்பாக இந்தக் கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன... [மேலும்..»]