புதிய பொற்காலத்தை நோக்கி – 11

உலகம் முழுவதுமே எல்லாத் தொழில்களும் பரம்பரை வழியிலேயே கைமாற்றித் தரப்பட்டபோதிலும் பாரதத்தில் மட்டுமே அப்படி இருந்ததாகவே மெக்காலே கல்வி முத்திரை குத்தியது. ஐரோப்பாவிலும் நவீன பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகே கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்றாலும் பாரதத்தில் மட்டுமே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டதாக அவர்கள் நம் வரலாற்றை எழுதிக் கொடுத்தார்கள். அதுவே இன்றைய அறிவுஜீவி, அரசியல் ஜீவி மட்டங்களில் மனனம் செய்யப்பட்டு முழங்கப்படுகிறது…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 11

புதிய பொற்காலத்தை நோக்கி – 10

எல்லாரும் எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் இன்றைய பள்ளிக் கல்வி முறை அன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்கவே பட்டிருக்கவில்லை. எனவே இந்தியாவிலும் அது இருந்திருக்கவில்லை… அக மண முறையும், குல பந்தி – குல விருந்து முறையும் இயல்பான தேர்வாகவே இருந்திருக்கிறது. இந்துசமூகத்தில் மட்டும் கடைநிலையில் இருந்தவர்களும் இழிவான தொழிலைச் செய்தவர்களும் மேலேற முடியாமல் போய்விட்டது என்ற வாதத்தில் அர்த்தமே இல்லை. அவர்களுக்கான வெளிகள், உரிமைகள், அதிகாரங்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்திருக்கின்றன…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 10

புதிய பொற்காலத்தை நோக்கி – 9

மொழி, மதம், நிறம், இனம் போன்ற உலகெங்கும் நிலவிய குழு அடையாளம் போன்றதுதான் ஜாதி. பிற அடையாளங்கள் பெருமளவுக்குப் பெற்றோரிடமிருந்து கைமாறித் தரப்பட்டது போலவேதான் ஜாதியும் கைமாற்றித் தரப்பட்டிருக்கிறது. தொழில் புரட்சி நடப்பதற்கு முன்பு வரை உலகம் முழுவதுமே ஒருவரின் தொழில் என்பது பெற்றோரின் தொழிலாகவே அதாவது குலத் தொழிலாகவே இருந்திருக்கிறது… காலனிய அடிமைத்தனத்தில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நமது ஜாதி சமூகம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அவரவர் பணியை அவரவர் திறம்படச் செய்துவந்ததுதான் என்ற புரிதல் நமக்கு வேண்டும்..

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 9

சொல்லப்படாத பறையர் வரலாறு

டேனிஷ் மிஷனரி ஆவணங்களில் இருந்து பறையர்கள் பெருமளவில் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இங்கு படை என்பது ஐரோப்பிய படை மட்டும் அல்ல ; மராத்திய அரசர்களின் படையும் தான்…பறையர்களிடம் ஏராளமான மாந்த்ரீக, வைத்திய சுவடிகள் இருப்பதை தெரிந்துகொண்டோம். அதுமட்டும் இல்லாமல் இவர்களின் வைத்திய, மாந்த்ரீக திறனை அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தி இருக்கின்றனர்; அதற்கான தக்ஷிணையும் கொடுத்திருக்கின்றனர்… பறையர்கள் சில இடங்களில் சில நேரங்களில் கொடுமைப்படுத்தபட்டனர் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவர்கள் வேறு சில இடங்களில் விவசாய குடிகளாகவும் போர்குடிகளாகவும் கோலோச்சினார் என்பது. அவர்கள் பெருமையை கூறாமல் அவர்கள் அனுபவித்த கொடுமையை மட்டும் கூறுவது மன ரீதியாக அவர்களை வலிமை இழக்க செய்து தாழ்வு உணர்ச்சியை உருவாக்குவதற்கான தந்திரம்…

View More சொல்லப்படாத பறையர் வரலாறு

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி?…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

75 வருடங்களுக்கு முன்பு பாபாசாகிப் அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) எனும் புத்தகத்தை இப்போது மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என பார்த்துவிட்டு அதற்கான விமர்சனத்தை பார்ப்போம்… இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க சாதியே தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு தாங்கள் ஒருவருக்கொருவர் உறவு கொண்டவர்கள் என்ற பிரக்ஞையே இல்லை. இந்துக்களுக்கு தங்களுடைய சாதியோடு மட்டும் உறவு இருக்கிறது, மற்றைய இந்துக்களுடன் கிடையாது…. சாதி என்ற அமைப்பு இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்கித் தருவது இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராக இருக்கிறது. அதற்கு அடிப்படையாக நூல்கள் எழுகின்றன… சதுர்வர்ணம் சூத்திரர்களுக்கு மிகவும் கொடுமையான அமைப்பாக இருக்கும். சூத்திரர்கள் சதுர்வர்ண முறையின் கீழ் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை நம்பியே இருக்கவேண்டிய அவசியம் இருக்கும். மற்றவர்கள் சூத்திரர்களை கொடுமைப்படுத்த நினைத்தால் அதை யாரும் கேட்கமுடியாமல் போகும்…

View More அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

View More உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்