Posts Tagged ‘ சிதம்பரம் ’

அரசியல், நிகழ்வுகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

September 24, 2010
-
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மேலும் »

ஆன்மிகம், சமூகசேவை, சமூகம்

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

உழவாரப் பணியில் ‘சிவ கணங்கள்’: சிதம்பரம் வழிகாட்டுகிறது!

துடைப்பம், தண்ணீர் வாளிகள், மம்மட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றுடன் பக்தர்கள் தூய்மைப் பணியில் இறங்கினார்கள்...தீட்சிதர்கள், அவர்களுக்கு அன்புடன் அன்னமிட்டனர். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து தீட்சிதர்கள் வழங்கிய உணவை உண்டனர்... சிதம்பரம் கோயில் தூய்மையானது. இப்போது புது மெருகுடன் கோயில் காட்சி அளிக்கிறது; சிதம்பரம் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் »

இலக்கியம், சைவம், வழிகாட்டிகள்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று... மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்..

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், சைவம், தொடர்

தலபுராணம் என்னும் கருவூலம் – 1

தலபுராணம் என்னும் கருவூலம் – 1

பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்.... தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்...

மேலும் »

கலைகள், வரலாறு

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

தேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை...சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை...

மேலும் »

சமூகம், வழிகாட்டிகள்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

வள்ளலாரும் வாரியாரின் வரவு செலவுக் கணக்குகளும்

"வள்ளலாரின் அடியார்கள்" என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டுதான் திருப்பணி செய்தேன்... எனக்கு பதிவு தபால் வந்திருந்தது. மேடையிலமர்ந்து பிரித்து படித்தேன். கும்பாபிஷேகம் செய்யும் குற்றத்துக்கு என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அதில் கண்டிருந்தது ....

மேலும் »

இசை, இலக்கியம், கலைகள், சைவம்

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

திருமுறை இசையில் அழகியல் மாற்றம்

சம்பந்தர் இசையில் புது மரபினைத் தோற்றுவித்ததைப் போலவே இசைப்பாடல்களின் வடிவத்திலும் புது மரபினைத் தோற்றுவித்தார்.... யாழின் கட்டிலிருந்து முதலில் இசை விடுதலை பெற்றது. பின் யாப்பின் கட்டினையும் உடைத்து விரிவடைந்தது. இது தென்னக இசை உருக்களில் நிகழந்த அழகியல் மாற்றம் ...

மேலும் »

வழிகாட்டிகள்

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா

"குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்."

மேலும் »