ஆன்மிகம், போலி ஆன்மிகம், துறவு, சாமியார்கள் : ஒரு கேள்வி-பதில் - ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் - நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள் - பாகிஸ்தானிலிருந்து திரும்பி வரும் ஹிந்துக்கள்
“தன்பெருமை தான் அறியான்”
By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
Posted in இந்து மத விளக்கங்கள், சைவம் on 12 February 2010
Stats: பார்வை: 1,044 and 92 Comments

நெருப்புத் தணல் மீது இயல்பாகவே வெண்மையான சாம்பல் படியும். வீசினால் சாம்பல் கலையும், மீண்டும் படியும். முடிவில் தணல் இன்றி சாம்பலே மிஞ்சும். சிவனுக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லை. அவன் தாங்கும் திருமேனிகள் அவனுடைய திருவருளால் வேண்டும்போது கொள்வனவாகும். திருவருளே சிவசத்தி.அதுவே அம்பிகை. அவனுடைய திருவருளாகிய அம்பிகையே அவனுடைய வடிவம் என்று உணர்த்துவது இந்தத் திருநீறு.

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
By ஜெயஸ்ரீ சாரநாதன்
Posted in ஆன்மீகம், இந்து மத விளக்கங்கள் on 26 January 2010
Stats: பார்வை: 1,477 and 32 Comments

நாராயணன் என்றாலே, ‘அவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அவனில் எல்லாம் இருக்கின்றன’ என்பது பொருள். அவனைப் பிரம்மம் என்பர். .. நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு
By அரவிந்தன் நீலகண்டன்
Posted in அறிவியல், வழிகாட்டிகள் on 11 December 2009
Stats: பார்வை: 785 and 7 Comments

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்
By ஜடாயு
Posted in இந்து மத விளக்கங்கள், சமூகம், பொது on 11 November 2009
Stats: பார்வை: 967 and 21 Comments

… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது… விசித்திரங்கள் கொண்ட புராணங்களும், கோயில் சிற்பங்களும் நாம் காணாதவை, நாம் அறியாதவை பிரபஞ்சமெங்கிலும் உண்டு என்பதை நமக்கு எப்போதும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். முத்திரை குத்தி மனதை மூடிக் கொள்வதைக் காட்டிலும், புரிந்து கொள்ளும் முயற்சியுடன் மனதைத் திறந்து வைத்திருப்பதே சிறந்தது என்று நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி கேலக்ஸி எப்படி இயங்குகிறது?
By ஜெயபாரதன்
Posted in அறிவியல் on 11 July 2009
Stats: பார்வை: 357 and 2 Comments

வானியல் விஞ்ஞானம் ஒவ்வொருவர் ஆத்மாவையும் விண்ணை நோக்கக் கட்டாயப் படுத்துகிறது. மேலும் நம்மை ஓர் உலகிலிருந்து மற்றோர் உலகிற்கும் அது வழிநடத்திச் செல்கிறது.” — கிரேக்க மேதை பிளாடோ.



"));