தேநீர் விற்றவன் தேச தலைவனா?

அத்தகைய திறமைகள் சாவர்க்கருக்கு உண்டா? ஐநா சபைக்கு காஷ்மிர் பிரச்சனையை கொண்டு போக படேலுக்கு தெரியுமா? சாவர்க்கர் உயிரை துச்சமென மதித்து ஆகப்பெரிய இழப்புகளை சந்தித்து இறுதி மூச்சு வரை தேசத்தையே தன் லட்சியமாக க்கொண்டு வாழ்ந்திருக்கலாம். சமஸ்தானங்களாக சிதறுண்டு போகட்டும் என வெள்ளைக்காரன் போட்ட திட்டத்தை மண்ணை கவ்வ வைக்க தன் உடல்நிலையை தியாகம் செய்து படேல் உழைத்திருக்கலாம். பெருநோய் உடலை அரிக்க சுப்பிரமணிய சிவா செக்கிழுத்திருக்கலாம்… ஆனால் அன்னை இந்திராகாந்தி சின்னவயதிலேயே பொம்மைகளை தன் முன் நிற்கவைத்து அவற்றிடம் இன்குலாப் சிந்தாபாத் என முழங்கினார் தெரியுமா? ஜவஹர்லால் நேரு அந்த வசந்தத்தின் இளவரசன் செக்கசெவேலென்று இருப்பார் தெரியுமா?…

View More தேநீர் விற்றவன் தேச தலைவனா?

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

வாழ்வின் துன்பமான சில கட்டங்களில், அவற்றிலிருந்து மீள்வதற்கு தனக்கு மரணம் நேர்ந்தால் நல்லது என்று பலரும் நினைக்கலாம். அப்போது அவன் என்னதான் முயற்சி செய்தாலும் அவனுக்கு மரணம் வாய்க்காமல் போகும்போது, அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். அதேபோல் ஒருவன் என்னதான் தவிர்க்க முயன்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டால் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாது. இதுதான் இயற்கை நியதி. அதனால்தானே மரணத்தைக் கொண்டு வருபவனுக்குக் காலன் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆக பிறப்பதும் நம் கையில் இல்லை, இறப்பதும் நம் கையில் இல்லை. அதனால் வாழும்போது நாம் செய்யவேண்டியது என்ன என்று யோசிப்பவனும், வாழ்வதன் பொருள் என்ன என்று சிந்திப்பவனுமே பிறந்த பிறப்பின் பயனை இறப்பதற்கு முன் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் அறிந்து கொள்கிறான்.

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19

”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது… நக்சல் பாதிப்பு பகுதிகளில் “சிவப்பு” பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?… உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்…

View More ”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி

அவரைப் பார்த்து புன்னகைத்த அத்வானி, ‘எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு அந்த வயோதிகர், ‘எனக்கு 65 வயதாகிறது. அவர் (இந்திரா காந்தி) செய்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை. என்னால் இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என துடிக்கிறேன். நான் இனியும் தொடர்ந்து வாழவிரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். நான் சாகத்துணிந்துவிட்டேன். நான் நேரே சென்று அவரை சுட்டுக்கொல்லவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று கூறினார்.

View More நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி