Posts Tagged ‘ சிவ விஷ்ணு ஐக்கியம் ’

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், பொது

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு

கந்தபுராணத்தில் மிகச்சிறப்பாக ஐயனாரின் அவதாரம் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். எனவே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஐயனார் வழிபாட்டில் நம் தமிழ் மக்கள்... இறைவனின் திருவடிவங்களுக்கு இடையில் உறவுமுறை பேசுவதும், ஒருவர் ஒருவருக்குப் பிறந்தார், அவர் இவருடன் சண்டையிட்டார் என்றெல்லாம் சொல்வதும்... மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும்?

மேலும் »

ஆன்மிகம், இலக்கியம், தத்துவம்

பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

October 16, 2010
-
பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் - எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்...

மேலும் »

சைவம், வழிகாட்டிகள், வைணவம்

வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

வைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். .. பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்கமலும் ஆழ்நிலைத்தியானத்தில் ஆழ்ந்திருந்தது... “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்...

மேலும் »

சமூகம், சைவம், நிகழ்வுகள், பண்டிகைகள், பொது, வீடியோ

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் "கோபாலா கோவிந்தா" எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

மேலும் »

இந்து மத விளக்கங்கள், இலக்கியம், கம்பராமாயணம்

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

January 28, 2010
-
கம்பன் கண்ட சிவராம தரிசனம்

நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை... இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ?

மேலும் »

இந்து மத விளக்கங்கள், சைவம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.

மேலும் »