அன்னமும் அடையாளமும்

என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?… அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது….

View More அன்னமும் அடையாளமும்

வன்முறையே வரலாறாய்…- 24

1947 மார்ச் 6-ஆம் தேதி அம்ரித்சருக்கு அருகில் ஷரிஃபுரா பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி அதில் பயணத்துக் கொண்டிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். கொல்லப்பட்ட இந்து/சீக்கியர்களின் பிணங்களுடன் அந்த ரயில் அமிர்த்சர் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. முஸ்லிம்களின் கொலை வெறியாட்டம் அமிர்த்சரிலும் தொடங்கியது. அமிர்த்சர் மருத்துவமனை பிணங்களால் நிரம்பி வழிந்தது… மார்ச் 7, 8 தேதிகளில் முஸ்லிம் லீக், பதினொன்று இந்து மற்றும் சீக்கியப் பிரதி நிதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியே ஏற்படுத்துவது அந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க வந்த பிரதி நிதிகளில் ஏழு பேர்களைப் பிடித்த முஸ்லிம் கும்பலொன்று அவர்களை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. அங்கிருந்து இரண்டு பிரதிநிதிகள் மட்டுமே தப்பிச் சென்றார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 24

வன்முறையே வரலாறாய்… – 4

காஜியானாவர், ஜிஸியா வரி வசூல் முறைகளைக் கூறிவிட்டு அதற்கும் மேலாக, “வரி கொடுக்கும் காஃபிர் வாய் திறந்து எதுவும் சொன்னால், வரி வசூலிக்கும் அதிகாரி அவன் வாயிலே எச்சிலைத் துப்ப வேண்டும். இவ்வாறு செய்வதனால் அந்த காஃபிர் தான் எத்தனை கீழான அடிமை என்பது, இஸ்லாம் எத்தனை மேலான மார்க்கம் என்பதுவும், பொய்யான கடவுள்களை அவன் வணங்கும் கேவலமும் அவனுக்கு விளங்கும்” என சுல்தானுக்கு எடுத்துக் கொடுக்கிறார்… துன்புற்ற காஷ்மீரி பண்டிட்டுகள் அன்றைய சீக்கிய குருவான தேஜ்பகதூர் சிங்கிடம் தஞ்சமடைந்து, அவரின் உதவியை வேண்டி நின்றார்கள். குரு தேஜ்பகதூர் அவுரங்கசீப்பின் அரசவையை அடைந்து அவனிடம் எடுத்துரைக்கிறார். சினமடைந்த அவுரங்கசீப் தேஜ்பகதூரைச் சிறையிலைடைத்து, வாரக்கணக்கில் துன்புறுத்திப் பின்னர் அவரையும் இஸ்லாமியராக மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தான். இதனை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூரும் அவரது இரண்டு சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்….

View More வன்முறையே வரலாறாய்… – 4

ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்…

View More ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே

பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பாரதத்தின் மீது படையெடுப்பதும் தாக்குவதும் கொள்ளை அடிப்பதும், அடிமைகளாக மக்களை சிறைபிடித்து செல்வதும் நடந்து வந்துள்ளன. மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில்தான் இந்த கொடூரச்செயல்களை நிறுத்தும்படி ஆப்கானிஸ்தானம் பணியவைக்கப்பட்டது.

View More பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே