Posts Tagged ‘ சுஜாதா ’

அனுபவம், நிகழ்வுகள்

கோவை புத்தகக் கண்காட்சி 2010

கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப்...

மேலும் »

அரசியல், தொடர்

போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

October 30, 2009
-
போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன. -பக்.283/திராவிட இயக்க வரலாறு”

மேலும் »

சமூகம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கண் விழித்த கானகம்: புத்தக விமரிசனம்

கதாநாயகன் பிர்ஸா முண்டா தன்னை 'மலையிலிருந்து வந்தவன்' என்று சொல்லிக் கொள்கிறான். உலகத்தில் உள்ளவற்றில் சிறந்தவை எல்லாமே மலையிலிருந்துதான் வரும்... கடற்கரையில் காலார நடந்து பின் வீடுவந்து கால் அலம்பிய பின்னும் விரலிடுக்கில் சிக்கி உறுத்தும் மணல்போல, கதாபாத்திரங்கள் படித்து முடித்த பின்னும், நம்மனதில் புகுந்து உறுத்துகின்றன.

மேலும் »