வன்முறையே வரலாறாய்… – 17

அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்களும் இப்படிப் பட்டவர்கள் தான், இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் தான். இதை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின் கோலம் என்பதினைத் தவிர வேறென்ன சொல்ல? அவர்களால் கொல்லப்பட்ட அல்லது அவர்களின் தூண்டுதலால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்துக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனோ இது?….

View More வன்முறையே வரலாறாய்… – 17

வன்முறையே வரலாறாய்… – 10

எந்தவொரு பகுத்தறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள மனிதனும் சூஃபிக்களின் அற்புத சக்திகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்பவே மாட்டான். அது நம்பிக்கையாளர்களின் கற்பனையில் உதித்த வெறும் புனைகதைகளேயன்றி வேறோன்றுமில்லை என்பதால். இந்த சூஃபிகளின் “அற்புத சக்தி” பற்றி ஆராய்ந்த பேராசிரியர் மொஹ்மத் ஹபீப் அவர்கள் இவையத்தனையும் பின்னாட்களில் இட்டுத் திரிக்கப்பட்ட புனைவுகளே என்னும் முடிவினை நம் முன் வைக்கிறார். இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படியும், இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சூழ்நிலைகளையும் அறிந்த் எவரும் சூஃபிக்கள் இந்துக்களை அமைதியான வழிமுறைகள் மூலம் மதம் மாற்றினார்கள் என்பது வெறும் புளுகுகள் என்பதினைத் தெளிவாக்குகின்றன. சூஃபிகளில் புகழ் வாய்ந்தவரான அமீர்-குஸ்ரு (பதினான்காம் நூற்றாண்டு) அவரது குறிப்புகளில் எவ்வாறு காஃபிர் இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டு வாள் முனையில் பெருவாரியாக மதமாற்றம் செய்யப்படார்கள் என்பதனை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் எந்தவொரு இடத்திலும் காஃபிர் இந்துக்கள் அமைதியான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு சிறு குறிப்பு கூட இல்லை என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

View More வன்முறையே வரலாறாய்… – 10