ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!

அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டு பவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர். இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.

View More ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

திருவிழாவின் போது நடுத்தெருவில் பொங்கல் வைத்ததாக குற்றம் சாட்டப் பட்டு 1000 பெண்களை திருவனந்தபுரம் காவல்துறை கைது செய்து தடை உத்தரவை மீறியதற்காக வழக்கும் பதிவு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது… சிந்த் மாகாணத்தில் சிறுமிகள், திருமணமான பெண்கள் உட்பட 25-30 இந்துப் பெண்கள் ஒவ்வொரு மாதமும் கடத்தப் பட்டு மதமாற்றப் படுகிறார்கள்… மதுரை மீனாட்சி கோயிலைச் சுற்றி சட்டத்தை மீறிக் கட்டப்பட்டுள்ள 770 கட்டடங்கள் குறித்து இன்னும் 60 நாட்களுக்குள் நடவடிக்கை… உபனிஷத ஞானச் செல்வத்தினை வாராவாரம் தொலைக்காட்சித் தொடர் வடிவில் வழங்கும் ஒரு சீரிய முயற்சி “உபநிஷத் கங்கா”…

View More இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

வெளிநாட்டவர்கள் புனித நகரமான ஹரித்வாருக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்யர்கள்… யோகம், ஹாரி பாட்டர் கதைகள் ஆகியவை தீயவை, என்று கத்தோலிக்க சபையின் தலைமை பேயோட்டி தீர்ப்பு … கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்… மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து அங்குள்ள நிலவரம் பற்றியும் மனித உரிமை மீறல்கள் பற்றியும்… அனாதைகள் இல்லத்தில் குழந்தைகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்த இல்லத்தின் தலைவி பெண் பாதிரியார்…

View More இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்திய தேசிய, கலாசாரத் தன்மையைத் தன் பெயரிலேயே தாங்கி “சுதேசி” என்ற புதிய தமிழ் வார இதழ் தொடங்கப் பட்டுள்ளது..அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்…. செப்டம்பர் 8 முதல்…தமிழகம் முழுவதும்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்..

View More சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா?…திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்…ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது….

View More இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும், இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த, கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும் அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர். காவல்துறையினர் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர்…

View More ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்

தமிழகத்தின் ஒரு பஞ்சாயத்து முழுவதும் பஞ்சாயத்து தலைவர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய ஜமாத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா??… திம்மிகளாக வாழ மறுத்து சட்டரீதியாகவும், ஜனநாயக முறையிலும் உறுதியாகப் போராடி வெற்றி பெற்றிருக்கின்றனர் கீழ்விஷாரம் இந்துக்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

View More கீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த தமிழ் இந்துக்களின் போராட்டம்

இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

கிபி 2009 இல் மீண்டும் வருகிறார் ஒரு முகமது கஜினியிலிருந்து. அதே சோமநாதபுரம் இருக்கும் குஜராத்துக்கு. படையுடன் அல்ல. பணிவுடன். குஜராத் செழிப்புடன் முன்னேறிக்கொண்டிருக்க கஜினி இன்று கோரயுத்தங்களால் பாழடைந்து கிடக்கிறது. குஜராத் நகராட்சியின் நகர்ப்புற நிர்வாகிகளிடம் கஜினியை மீண்டும் புனர்நிர்மாணிக்க உதவி கேட்கிறார் முகமது இப்ராஹீம்.

View More இன்னா செய்தாரை… அல்லது 2009 இல் குஜராத் வந்த கஜினி முகமது

இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடம்

இந்து மதத்தில் ஒழுகி இந்து மதக் கோட்பாடுகளை கடைபிடிக்கும் அனைவருக்கும் இங்கே அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிக்கு எதிர்பாராத அளவில் ஆதரவுகள் பெருகிவருகின்றன. ஹாரோ நகரின் 900 நபர்கள் இந்த பள்ளியை ஆதரித்து கடிதங்கள் அனுப்பியுள்ளார்கள்.

View More இங்கிலாந்தின் முதல் இந்து பள்ளிக்கூடம்

காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்

“நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்” என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு “நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்” என்றார் ரோஷன் லால்.

View More காஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்